வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில் ஒட்டு போடுவதற்கும், நேர்மையான தேர்தல் நடப்பதற்கும் கீழ்கண்ட சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 1 இந்தியாவில் உள்ள, அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளையும் செல்லாது என்று அறிவியுங்கள் 2 அதற்கு பதிலாக ஆதார் Bio-Metric மூலம் மட்டுமே இனிவரும் காலங்களில் ஒட்டு பதிய ஏற்பாடு செய்யுங்கள் 3 ஆதாரில் நிரந்தர வசிப்பிட முகவரியை, சரி பார்த்து கொள்ள வேண்டியது மக்களின் பொறுப்பு 4 ஆதாரில் உள்ள முகவரிக்கு உட்பட்ட சட்ட மன்ற, நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்களிக்க அவர்கள் தகுதியானவர்களாக கருத வேண்டும். 5 வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் கூட அருகில் உள்ள ஆதார் மையத்திலோ, வங்கி ATM-மிலோ ஆதார் Bio-Metric மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யுங்கள் அங்கெல்லாம், காவல் பணிக்கு ஒரு காவலர் மற்றும் ஒரு துணை ராணுவ வீரர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 6 ஒருவர் மட்டுமே, வாக்களிக்க வங்கி ATM உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். எழுத படிக்க தெரியாதவர்கள், வயதானவர்கள், நோய்வாய் பட்டவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு உறவினர் அனுமதிக்கலாம். 7 இதற்கு, முன்பு பிற அடையாள சான்றுகளை எல்லாம் ஆதார்-உடன் இணைக்க உத்தரவிட்ட மத்திய அரசு வாக்காளர் அடையாள அட்டையை மட்டும், ஆதாருடன் இணைக்க தயங்குவது ஏன்? ஏற்கனவே வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார்-udan இணைக்க வேண்டும். அல்லது ஆதார் மட்டுமே போதுமானது. அதன் அடிப்படையில் வாக்களிக்க அனுமதிக்கலாம். இந்த முறையை கொண்டு வந்தால், போலி வாக்காளர் அட்டை நீங்கும். வெளி மாநிலத்தில் வசிப்பவர்கள், ஒட்டு நடைபெறும், தினத்தில் வியாபாரம், வேலை, படிப்பு காரணமாக வெளியூரில் இருப்பவர்கள் கூட அருகில் உள்ள ஆதார் மையத்திலோ, வங்கி ATM-மிலோ வாக்களிக்க ஏதுவாக இருக்கும். அதன் மூலம் ஒட்டு எண்ணிக்கை உயரும். தேர்தல் ஆணையும், இதை பரிசீலிக்குமா? 5 ஆண்டுகளுக்கு முன்பே இதை "விகடன்" இல் பதிவு செய்திருந்தேன்.