உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னா ஒரு வில்லத்தனம்...! வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவுக்கு அனுமதிப்பதா? கேட்கிறார் ராமதாஸ்

என்னா ஒரு வில்லத்தனம்...! வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவுக்கு அனுமதிப்பதா? கேட்கிறார் ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். இது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பது போன்றது என பா.ம.க., தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட அறிக்கை: சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.

வழிகாட்டுதல்

பத்திரப்பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையெல்லாம் பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது. வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகள் மீது எந்த ஆணையும் பிறப்பிக்கப்படாத நிலையில், அதை பதிவு செய்யலாம் என்று நீதிமன்றங்கள் கூறியிருந்தால், அதை அந்த வழக்குடன் தொடர்புடைய சொத்துடன் மட்டும் தான் பொருத்திப் பார்க்க வேண்டுமே தவிர, அனைத்துச் சொத்துகளுக்கும் அந்த வழிகாட்டுதலை பின்பற்ற முடியாது.

மோசடி நபர் தப்பிச்சுருவார்!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப் பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். வருவாயை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு பத்திரப்பதிவுத் துறை செயல்படக்கூடாது. சொத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவில்லை என்பதற்காக சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டால், மோசடி செய்தவர் பெரும் லாபத்துடன் தப்பி விடுவார்.

திரும்ப பெறுங்கள்!

சொத்தின் உரிமையாளரும், அதை வாங்கியவரும், வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் தான் பாதிக்கப்படுவார்கள். இதை பத்திரப்பதிவுத்துறை உணர வேண்டும். வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது. நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Manoharan
செப் 17, 2024 05:54

ஆவணமின்றி போலி பத்திர பதிவு மூலம் சப் ரெஜிஸ்டறார் பொறுப்பு அவர்கள் தடை மனு தானாகவே நீக்கியம் அனைத்து பதிவு சட்ட விதிகளையும் மீறி தன் பினாமி பெயரில் பதிவு செய்து விவசாய நிலங்களை சூறையாடல்


N Sundarrajan
செப் 12, 2024 14:29

அடங்கமறு அத்துமீது சர்வாதிகாரி ஆயிடுவேன் இது எல்லாம் கூட்டு சேர்ந்ததுன்னா எப்படி இருக்கும் அரசாங்கம் இப்படித்தான் இருக்கும் முரட்டுத்தனமா...


Yaro Oruvan
செப் 11, 2024 20:39

திருடர் முன்னேற்ற கழகத்திடம் வேறென்ன எதிர்பாக்க முடியும் ? மறுபடி அம்மா நில நில அபகரிப்பு செய்த்தவர் இது நடவடிக்கை எடுக்கவா போகிறார்? ஆட்டயப்போடு.. போதையைப்போடு.. முப்பெரும் விழா கொண்டாடு.. என்ன செஞ்சாலும் இருக்கவே இருக்கானுவ நம்ம ஒட்டு போடும் அடிமைகள்.கான் + கிராஸ் கும்பல் .. பாஜக உள்ள வந்துரும்ப்பா.. உப்பிஸ் கமான் ஆரம்பிங்க...


V GOPALAN
செப் 11, 2024 18:22

G square Order. We have to oblige. G square only pumped money to bribe voters. This is to satisfy Tamilnadu Terrir group and missionaries. Our useless court also keeping such cases pending for more than 15 years


Raja
செப் 11, 2024 17:37

ரியல் எஸ்டேட் காரன் மக்களை ஏமாற்ற மற்றும் ஒரு வழி, அரசில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே


Anantharaman Srinivasan
செப் 11, 2024 17:22

ஊரான் சொத்தை அபகரிக்க ஈசியான வழி.


Dharmavaan
செப் 11, 2024 16:37

இதற்கெல்லாம் காரணம் நீதியின் தாமதம் அது திறந்தினாலொழிய விமோச்சனம் இல்லை .மோடி துணிந்து நீதி துறை மாற்றங்கள் செய்ய வேண்டும்


Ms Mahadevan Mahadevan
செப் 11, 2024 15:46

எஸ் . எளிய மக்கள் பாதிக்கப் பட வாய்ப்பு அதிகம். இவர் சொல்லுவது சரிதான். இவரும் வில்லத்தனமான ஆளுதான் அதை மறந்து விட முடியாது


ராஜா
செப் 11, 2024 14:46

எங்கேபோகுது இந்த ஆட்சி.இருக்கிற கொலை வெட்டு போததன்னு இது வேற அதிகரிக்கும் கொலைகள் குரங்கு கையில கொடுத்தா பூ மாலை மாதிரி இந்த ஆட்சி


P. VENKATESH RAJA
செப் 11, 2024 13:44

ஊழலை கண்டுபிடிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்


முக்கிய வீடியோ