உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணியில் சேர வாய்ப்பு

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணியில் சேர வாய்ப்பு

சென்னை, 'தமிழக அரசின் கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின், 1962 என்ற கட்டணமில்லாத கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை, இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த சேவைக்கான உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உதவியாளர் பணிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், எந்தவொரு பயிற்சி வகுப்பையும் முடித்த ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாதம் 15,725 ரூபாய் சம்பளம்.ஓட்டுனர் பணியிடங்களுக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 24 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண்களாக இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ.,ருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் பெற்று குறிப்பிட்ட காலம் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு, மாதம், 15,820 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.மேலும் விபரங்களை அறிய விரும்புவோர், 044 --- 2888 8060 மற்றும் 91500 84170; 98403 65462 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ