உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச அரசியல் பாடம் படிக்க அண்ணாமலை லண்டன் பயணம்

சர்வதேச அரசியல் பாடம் படிக்க அண்ணாமலை லண்டன் பயணம்

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று அதிகாலை லண்டன் புறப்பட்டுச் சென்றார்.இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, கட்சி தலைமை அனுமதி அளித்தது.அதைத் தொடர்ந்து, புத்தாய்வு படிப்புக்காக, அண்ணாமலை நேற்று அதிகாலை லண்டன் புறப்பட்டுச் சென்றார். இதற்காக, அதிகாலை 2:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலையை, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பூங்கொத்து கொடுத்து, உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.அதிகாலை 4:00 மணிக்கு, சென்னையில் இருந்து எமிரேட்ஸ் பயணியர் விமானத்தில், லண்டன் சென்ற அண்ணாமலை, நவம்பர் இறுதியில் தமிழகம் திரும்ப உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
ஆக 29, 2024 21:15

இந்தியாவில் படிச்சத வெச்ச திமுகவை பொலபொலன்னு பொளக்கறார். வெளி நாட்டில் படித்து வந்து இன்னும் என்ன செய்யபோகிறாரோ...?? வாழ்த்துக்கள் அண்ணாமலை அவர்களுக்கு.


sankaranarayanan
ஆக 29, 2024 20:40

அரசியலில் என்ன நடக்குது இந்த மாநிலத்தில்! ஒரு அரசியல்வாதி (முதல்வர்) அமெரிக்க பயணம் அதே சமயம் இன்னொரு அரசியல் தலைவர் லண்டன் பயணம் என்ன ஆச்சு இந்த மாநிலத்தில். இப்போது எல்லா முக்கிய அரசியல்வாதிகளும் அயல்நாடு நோக்கி பயணம் எடுப்பது இது எதிலே சென்று முடியுமோ தெரியவில்லை நாராயணா நாராயணா நாராயணா


venugopal s
ஆக 29, 2024 19:02

இத்தனை நாட்கள் இந்தியாவில் படித்தது தான் எல்லாம் வீணாகிப் போனது,இதையாவது உருப்படியாகப் படித்து விட்டு வரட்டும்!


நசி
ஆக 29, 2024 11:21

பூத்கமிட்டி அமைப்பில் கோட்டை விட்டு 1.50 லட்சம் வாக்காளர்களை இழந்ததை விடவா படிப்பினை வேண்டும். லண்டன் படிப்பு ஏட்டு சுரைக்கா எதற்கும் உதவாது. இலவசங்களை கோர்ட்டுகள நிறுத்த போவது கிடையாது நேர்மையான தேர்தலை எந்த கட்சியும் சந்திக்க தயாரில்லை..பண நாயகம் இந்தியாவை சீரழிக்கிறது மோடிக்கு இரு முறை மெஜாரிட்டி இருந்தும் எந்த தைரியமான நடவடிக்கையான கோர்ட்டுகளை ஓழுங்குபடுத்தல் ஊழல் பேர்வழிகளை ஓழத்தில் எதையும் செய்யவில்லை...5௦ சதவீதமக்கள் கஷ்டபட்டு மாள்வதுதான் மிச்சம். அண்ணாமலை படித்து என்ன பிரயோசனம்


தஞ்சை மன்னர்
ஆக 29, 2024 11:09

லண்டனுக்கு படிக்க போறது சொந்த காச இல்லை இதுவும் ரபெல் வாச் போல நண்பர்கள் உதவிய கொஞ்சம் நாங்களும் இதுபோல நண்பர்களை தேடுவோம்


தஞ்சை மன்னர்
ஆக 29, 2024 11:07

பாத்துக்கங்க பாத்துக்கங்க நானும் வெளிநாடு போறேன் நானும் வெளிநாடு போறேன் அப்படினு சொல்லுவது போல இருக்கு , பி சே பி தலைமை என்ன யோசித்து இருக்கும்


தஞ்சை மன்னர்
ஆக 29, 2024 11:06

அடேங்கப்பா ஊழல் பணத்தை ஒளிச்சு வைக்க ரெண்டு மாசம் ஆகுமா பெரிய தொகையாகத்தான் இருக்கும் போல இது நம்ம ஆத்மிக்கு தெரியுமா இல்ல அந்த ஊழல் பணமே அவரரோடது தான


தஞ்சை மன்னர்
ஆக 29, 2024 11:01

ஸ்டாலின் இங்கிட்டு போறாரு இவரு அங்கிட்டு போறாரு ஒருவேளை ஏதாவது ரகசிய ஒப்பந்தம் போட இருக்குமோ அதிமுக வுக்கு கொடுக்கும் கமிஷனை எங்களுக்கு கொடுங்க அதிமுக வை டம்மி செய்துவிடும் என்று போற வழியில் எங்காவது ஒரு நாட்டில் வைத்து சந்திப்பு இப்படியும் இருக்கலாம் ஆனா ஒண்ணும் மட்டும் உறுதி நாட்டில் இருந்து ஊழல் பணம் எங்கோ ஒரு நாட்டில் கை மாற போகுது அது மட்டும் உண்மை


தஞ்சை மன்னர்
ஆக 29, 2024 10:58

20 ஆயிரம் புத்தகம் படித்த "" ப்ரவுட் ஆப் கன்னடியன் கருநாடக சேர்ந்த இவருக்கே இந்த கதியா அப்போ தமிழக அரசியலை தமிழரை யாரு காப்பாத்துவா போய் ரெண்டு மாசம் இருந்து மூளையை சரி செய்து விட்டு வா என்று அனுப்பி இருக்குமோ பி சே பி ஒருவேளை இந்த பி சே பி இவரு சம்பாத்திய பணத்தை வேறு எங்கேயும் வைக்க சொல்லி இருக்குமோ இருக்கும் இருக்கும்


Mario
ஆக 29, 2024 09:19

சிரிப்பு போலீஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை