உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புவனேஸ்வர், சம்பல்பூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

புவனேஸ்வர், சம்பல்பூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து புவனேஸ்வர் மற்றும் சம்பல்பூருக்கு கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து வரும் 11, ஜூன் 1ம் தேதி காலை 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:30க்கு ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் செல்லும். புவனேஸ்வரில் இருந்து வரும் 12, ஜூன் 2ம் தேதிகளில் காலை 9:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் சென்னை எழும்பூரில் இருந்து வரும் 18, ஜூன் 7ம் தேதிகளில் காலை 10:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:00 மணிக்கு ஒடிசா மாநிலம், சம்பல்பூருக்கு செல்லும். சம்பல்பூரில் இருந்து வரும் 19, ஜூன் 8ம் தேதிகளில் காலை 11:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:35க்கு சென்னை எழும்பூர் வரும். சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை