உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட் வளாக கல்லறைகள் நினைவு சின்னமா? : மத்திய அரசு அறிவிப்பாணை கேட்கிறது ஐகோர்ட்

ஐகோர்ட் வளாக கல்லறைகள் நினைவு சின்னமா? : மத்திய அரசு அறிவிப்பாணை கேட்கிறது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், சட்டக்கல்லுாரி அமைந்திருந்த இடத்தில் உள்ள முன்னாள் கவர்னரின் மகன் மற்றும் அவரது நண்பரின் கல்லறைகள், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் என்பதற்கான அறிவிப்பாணையை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிய சட்டக்கல்லுாரி சுற்றுச்சுவருக்குள், கிழக்கு இந்திய கம்பெனியின் கவர்னராக பதவி வகித்த எலிஹு ஏல் மகன் டேவிட் ஏல் மற்றும் அவரது நண்பர் ஜோசப் ஹைனர்ஸ் ஆகியோரது கல்லறைகள் உள்ளன. இவை இரண்டுக்கும் வரலாற்று தொல்லியல் முக்கியத்துவம் இல்லாததால், வேறு இடத்துக்கு மாற்றக்கோரி, பி.மனோகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

முக்கியத்துவம் இல்லை

மனுவை விசாரித்த, நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:கடந்த 1687 முதல் 1692 வரை சென்னை கவர்னராக பதவி வகித்த ஏல், தன் மகன் மற்றும் நண்பருக்காக, இந்த கல்லறைகளை கட்டியுள்ளார். 1921ல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், இந்த கல்லறைகளை நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளனர். வரலாற்று, தொல்லியல் முக்கியத்துவம் இல்லாத நிலையில், 100 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது என்பதற்காக, கல்லறையை நினைவுச் சின்னமாக அறிவிக்க முடியாது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பித்தனர் என்பதற்காக, சுதந்திர இந்தியாவிலும் அதை தொடர வேண்டிய தேவையில்லை.

வேறு பகுதிக்கு மாற்றுங்க

நினைவுச் சின்னங்கள் என்பதற்கான சட்டப்படி யான அம்சங்களை, இந்த கல்லறைகள் பூர்த்தி செய்யவில்லை. நான்கு வாரங்களுக்குள், இந்த கல்லறை களை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் டி.மோகன் மற்றும் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுக்கள், நீதிபதிகள் எம்.சுந்தர், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆஜரானர். மத்திய அரசு சார்பில், துணை சொலிசிட்டார் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜரானார்.இரண்டு கல்லறைகளையும் நினைவுச் சின்னங்களாக அறிவித்து, 1921ல் பிறப்பிக் கப்பட்ட அறிவிப்பாணையை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAMESH
ஆக 27, 2024 00:53

முருகனை வணங்கினால் நல் வினை கிட்டும்....தமிழ் வளர வேண்டுமானால் நல்ல ஆசிரியர் இடம் சென்று படிக்க வேண்டும்...அப்ப வைரமுத்து அவர்களுக்கு தமிழ்.....


karthik
ஆக 26, 2024 10:33

கிழக்கிந்திய கம்பெனி என்பது இந்தியாவை சுரண்டி இங்கிலாந்து நாட்டை வளப்படுத்த உருவாக்கிய கம்பெனி ...அதில் பதவி வகித்த ஒருவரின் மகன் மற்றும் அவர் நண்பரின் சமாதிகளை நினைவு சின்னமாக அறிவிப்பது எல்லாம் அடிமைத்தனம்


sethu
ஆக 26, 2024 09:29

தேச விரோதிகளுக்கும் தேச துரோகிகளுக்கு,நாட்டை நாசமாக்கியவான்களுக்கும் மெரினாவில் கல்லறை எதுக்கு அதையும் அவனவன் சொந்த இடத்துக்கு தூக்கி எறியுங்கள் .


Indhuindian
ஆக 26, 2024 08:27

அப்படியே மரீனா பீச்சு பாக்கமும் கொஞ்சம் திரும்பி பாருங்களேன். ஒரே சுடுகாடா இருக்கு


r ravichandran
ஆக 26, 2024 05:57

தனி நீதிபதி சிறந்த தீர்ப்பை தான் வழங்கி உள்ளார். இதற்கு ஏன் மத்திய அரசு அப்பீல் மனு போட வேண்டும் என்று தெரியவில்லை.


chennai sivakumar
ஆக 26, 2024 06:30

குடைச்சல் கொடுப்பதற்கு நிறைய பேர் உள்ளனர்


Srinivasan k
ஆக 26, 2024 08:28

high court asks opinion from central government,


Kasimani Baskaran
ஆக 26, 2024 05:41

பிரிட்டிஷ் கால ஆட்சியை இன்னும் கூட புகழ்வோர் உண்டு.


kannan
ஆக 26, 2024 07:15

அவர்கள் நிகழ்கால ஆட்சியை ஒப்பிட்டு சொல்லியிருக்கலாமே


ponssasi
ஆக 26, 2024 10:51

சிறப்பான ஆட்சி என்பது கர்மவீரர் காமராசர் அரசோடு முடிந்துபோனது. இன்றய ஆட்சி அவலங்களை பார்க்கும்போது ஆங்கிலேயர் ஆட்சிமுறை சிறந்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை