உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படைக்கு 50 லட்சம் கொடுத்த பெண் யார்?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படைக்கு 50 லட்சம் கொடுத்த பெண் யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நிலப் பிரச்னை தொடர்பாக தன் மகனுடன் மோதியதால், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சிறையில் இருந்தபடி, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ரவுடி நாகேந்திரன் மிரட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dgl9xa2k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், 52, சென்னை பெரம்பூரில், இம்மாதம், 5ம் தேதி ரவுடி கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில், 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். அவர்களில், சென்னை குன்றத்துாரைச் சேர்ந்த ரவுடி, திருவேங்கடம், 33, என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இவர் தவிர மற்ற 10 பேரும் காவல் விசாரணை முடிந்து நேற்று, பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீசாருக்கு, ரவுடி நாகேந்திரன் மிரட்டல் விடுத்த தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, தனிப்படை போலீசார் கூறியதாவது:

ஆம்ஸ்ட்ராங் எதிரிகள் குறித்து விசாரித்து வருகிறோம். அப்போது, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன் விரோதம் இருந்தது தெரிய வந்தது. ஆம்ஸ்ட்ராங் மொபைல் போன் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்தோம். வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டது தெரியவந்து உள்ளது.ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கட்டுமான நிறுவன அதிபர் ஜெயபிரகாஷ், 30, என்பவரை கடந்தாண்டு, மாமூல் கேட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளார். அப்போது, ஜெயபிரகாஷுக்கு ஆதரவாக ஆம்ஸ்ட்ராங் செயல்பட்டுள்ளார்.இது, ரவுடி நாகேந்திரனுக்கு தெரியவந்தது. மகனுடன் மோதும் ஆம்ஸ்ட்ராங்கை மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளார். இதுபற்றி நாகேந்திரனிடம் விசாரிக்க உள்ளோம்.அத்துடன், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கூலிப்படையினருக்கு, பெண் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்தது குறித்தும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Babu raj s
ஜூலை 17, 2024 12:45

படத்தில் வருவது போல திரில்லாக இருக்கிறது ஐயோ அம்மா


sethu
ஜூலை 17, 2024 10:15

உத்தரபிரதேச, பிகார், மேற்குவங்கம், மும்பை, டெல்லி போற்றவற்றில் இருந்த ரௌடிகள் இப்போது மொத்தமாக தமிழகத்தில் சிறப்பு தொழில் முனையோராக அழைக்கப்பட்டுள்ளார் அதன் பலனை பொதுமக்கள் மட்டுமே அனுபவிக்க முதல்வர் தனது சிறப்பு போலீஸ் படையின் மூலம் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறார் ஆக விடியல் யாருக்கு என்பதில்தான் மக்களுக்கு இன்னும் தெளிவூ வரவில்லை


theruvasagan
ஜூலை 17, 2024 10:07

கொலைக்கு காரணமானவன் என்று ஒருத்தனை கூட்டிவந்து போட்டும் தள்ளியாச்சு. கேசு குளோஸ். அப்புறம் எதுக்கு இவ்வளவு ஆராய்ச்சியெல்லாம். அப்படியும் உங்களுக்கெல்லாம் திருப்தி இல்லைனா அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ ஏட்டு ரைட்டர் இவங்களையெல்லாம் ஒன்றரை நாள் சஸ்பெண்ட் பண்ணிட்டா போச்சு.


ஜெனமேஜெயன்
ஜூலை 17, 2024 09:48

போட்டோவுல பாருங்க.. உத்தமராய் தெரிகிறார். பண்ணியதெல்லாம்.பக்கா ரவுடித்தனம்.


அப்புசாமி
ஜூலை 17, 2024 09:45

மொத்தத்துல இவுரு ஒண்ணும் பெரிய அரசியல் தலைவர் அல்ல. ரியல் எஸ்டேட் பிசினசில் ஒரு கட்டப் பஞ்சாயத்து ரவுடி. இவரது சாவுக்கு ரியல் எஸ்டேட் மாஃபியாக்ஜளின் தொழில் போட்டியே காரணம். இவருக்கு பரிந்து பேசிய அரசியல் அல்லக்கைகள் எப்போ திருந்துவாங்க? வரிசையா வாங்க.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 17, 2024 10:16

அப்படி / அதைப்போன்ற ஒரு குற்றப் பின்னணியில் இருந்து வந்து உனது மன்னர் குடும்பத்துடன் நெருக்கமானவர்கள்தான் ...


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 17, 2024 09:36

கோயிலு கோயிலா போயி சாமி கும்புடுற பெண்ணா ????


s sambath kumar
ஜூலை 17, 2024 13:58

அந்தப் பெண்ணா இருந்தா உண்மை வெளியிலே வராதே. அதுக்கும் மேலேயா இருக்கும்.


Sampath Kumar
ஜூலை 17, 2024 08:44

ஒரு ரௌடியை இன்னொரு ரௌடி போட்டு தளி உள்ளார் ஆக செய்தவனும் யோக்கியன் இல்லை கொண்டவனும் யோக்கியன் இல்லை இதுக்கு ஏன் இந்த பஞ்சாயத்து


sethu
ஜூலை 17, 2024 10:05

பாவம் தமிழன் இதோடு ஒழிந்தான் .


Duruvesan
ஜூலை 17, 2024 06:49

நாம சுட்டு கொன்னது புள்ள பூச்சிய, உண்மையான குற்றவாலின்னு அடிமைகள் நம்புடுச்சி, கேஸ் கிளோஸ்


raja
ஜூலை 17, 2024 06:15

ரவுடிகள் மாமுள் வாங்குவதில் நம்பர் இன்னு மாநிலம் ஆக்கிய மாடல் முதல்வரின் திறமையை மெச்சுவோம் வாருங்கள்....


Kasimani Baskaran
ஜூலை 17, 2024 05:31

50 லட்சம் கொடுத்த அந்தப்பெண் கட்சி சார்பற்று நடுநிலை வகிப்பவர் என்று பரவலாக பேசப்படுகிறது... ஆதாரமில்லாமல் எந்தக்கட்சியையாவது சம்பந்தப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற வழக்கை எதிர்நோக்க வேண்டிவரலாம் என்றும் காவல்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் செய்திகள்