உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேறு எதையோ மறைக்க கைது:- சீமான்

வேறு எதையோ மறைக்க கைது:- சீமான்

வேறு ஏதோ செய்தியை மறைக்கவே சர்வதேச பயங்கரவாதியை போல ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை, தமிழக காவல் துறை கைது செய்துள்ளதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது பேட்டி:'முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் பெரியவரா?' என எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியரிடம், ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு கேட்கிறார். அப்படியெனில், முதன்மை கல்வி அலுவலர் அனுமதி அளித்து தான் அசோக் நகர் பள்ளியில் மகாவிஷ்ணு பேசியிருக்கிறார். ஆனால், அப்பாவி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்துள்ளனர்.மகாவிஷ்ணு ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை பேசியிருக்கிறார். இதற்கு அனுமதி அளித்த உயர் அதிகாரி மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான நிலையத்தில் அவரை, ஏதோ சர்வதேச பயங்கரவாதியைப் போல நடத்தியுள்ளனர். இந்த செய்தியை வைத்து, வேறு ஏதோ செய்தியை மறைக்க பார்ப்பதாக தெரிகிறது.முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதால், முதலீடுகள் வந்து விடாது. தொழில் முதலீடுகள் என்ற பெயரில் விளைநிலங்களை பறிக்கின்றனர். 10 லட்சம் கோடி ரூபாயை கொண்டு வந்து, 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாக கூறுவது, அப்பட்டமான பொய். இவ்வளவு முதலீடுகள் வந்திருந்தால், டாஸ்மாக் மதுக்கடைகள் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிப்பது ஏன்?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை