உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பா.ஜ., பொறுப்பாளராக அரவிந்த் மேனன் நியமனம்

தமிழக பா.ஜ., பொறுப்பாளராக அரவிந்த் மேனன் நியமனம்

சென்னை:தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சி.டி.ரவி இருந்தார். இந்தாண்டு ஜனவரியில் அவர் மாற்றப்பட்டு, லோக்சபா தேர்தல் காலத்திற்கான புதிய பொறுப்பாளராக, கேரள மாநிலத்தை சேர்ந்த அரவிந்த் மேனன் நியமிக்கப்பட்டார். அரவிந்த் மேனன், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு பணிகளில் ஈடுபட்டார். தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட, பா.ஜ., கூட்டணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக அரவிந்த் மேனனையும், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியையும், அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று நியமனம் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்