உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி கொடியை ஆக. 22ல் அறிமுகம் செய்கிறார்  விஜய்

கட்சி கொடியை ஆக. 22ல் அறிமுகம் செய்கிறார்  விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, ஆக., 22ம் தேதி சென்னை பனையூரில் நடிகர் விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்.'விஜய் மக்கள் இயக்கம்' என்ற தன் ரசிகர் மன்றத்தை, கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக விஜய் மாற்றினார். லோக்சபா தேர்தலுக்கு முன்னரே கட்சி துவங்கினாலும், 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என அறிவித்தார்.தனி கட்சி துவங்கி விட்டதால், இருக்கும் படங்களை முடித்து, முழு நேரமாக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த விஜய், கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்; மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் செப்., 22-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது.இதற்கான இடம் தேர்வு செய்திருக்கும் கட்சி நிர்வாகிகள், இடத்துக்கு சொந்தமானவர்களிடம் பேசி வருவதாக தகவல். அவர்கள் இடத்தை மாநாடுக்கு தர ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் விக்கிரவாண்டியிலேயே திட்டமிட்டபடி மாநாடு நடக்கும் என தெரிகிறது.இதற்கிடையில் மாநாட்டின்போது கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே கட்சிக் கொடியை அறிமுகம் செய்வது என விஜய் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஆக. 22ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திலேயே புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்யவிருப்பதாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நடுவில் வாகை மலருடன், புதிய கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளதாக விஜய் கட்சியினர் தெரிவிக்கின்றனர். வாகை என்றால் வெற்றி என பொருள். கட்சியின் பெயரில் வெற்றி இருப்பதால், வாகை மலரை விஜய் தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajarajan
ஆக 18, 2024 09:27

அரசியல் கேள்விகளை விட்டுத்தள்ளுங்கள். அதனால் எந்த பயனும் இல்லை. திரு. காமராஜர் மற்றும் திரு. மன்மோகனை போல, நிர்வாகத்தில் / எந்த துறைகளில் என்ன மாற்றங்களை செய்வார் ?? என்ன உலகளாவிய புதிய முயற்சிகளை முன்னெடுப்பர் ?? ஏன் ? எதற்காக ? எத்தனை நாட்களில் ? அவற்றின் சாதக பாதகங்கள் என்ன ? என்ற கேள்விகளை மட்டும் கேட்டால் போதும். இவற்றிலேயே எதிர்கால சிந்தனை, வளர்ச்சி, செயல்திட்டங்கள், பலன்கள் போன்றவை அடங்கிவிடும்.


Durai Kuppusami
ஆக 18, 2024 07:49

புரியாத புதிர் இவர் ஏன் நெற்றியில் பொட்டு வைத்துள்ளார்.யாரை ஏமாற்ற இந்துக்கள் சூடு சொரணை இல்லாதவர்கள் என்பதாலா....நடக்கட்டும்


அரசு
ஆக 18, 2024 07:43

இப்போது இருக்கும் பல முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் தலை எழுத்து.


K.ANBARASAN
ஆக 18, 2024 07:41

கடைசில திமுக வோட கூட்டணி வைக்க போறதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்.


sridhar
ஆக 18, 2024 07:39

ஐயரை வச்சி நல்ல நாள் , நல்ல நேரம் எல்லாம் பாத்தாச்சா ஜோசப் விஜய் ?


Sundar
ஆக 18, 2024 08:11

மற்றும் சென்னையிலேயே பொதுக்கூட்டம் போடலாம்


Kasimani Baskaran
ஆக 18, 2024 07:32

சினிமா, கதை, வசனகர்த்தா என்று இருப்பவர்கள்தான் மேதாவிகள் என்று தமிழத்தில் ஒரு கருத்தியல் உண்டு. ஆகையால் பேசாமல் நடிகர் சங்கமே ஆட்சியை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.


Ms Mahadevan Mahadevan
ஆக 18, 2024 05:41

இருக்கிற கட்சி போதாதா? அதிக கட்சிகள் இருப்பது ஜனநாயகத்திற்கு, நாட்டுக்கு நல்லதல்ல.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை