உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்ரல் 30 வரை சட்டசபை கூட்டம்: சபாநாயகர் அறிவிப்பு

ஏப்ரல் 30 வரை சட்டசபை கூட்டம்: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை:“சட்டசபை கூட்டம் ஏப்., 30 வரை நடக்கும்; இன்று ஒருநாள் தவிர, மற்ற நாட்களில் கேள்வி நேர விவாதம் உண்டு,” என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சட்டசபையில், நாளை மறுநாள் முதல் 21ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடக்கும். மார்ச் 24 முதல் ஏப்., 30 வரை துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடக்கும். மொத்தம், 24 நாட்கள் சபை கூடும்.இன்று ஒருநாள் தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும், ஒரு மணி நேரம் கேள்வி நேர விவாதம் நடக்கும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அனைவருடனும் இருக்கும்படி முன்வரிசையில் இடம் கேட்டார். எந்த இடத்தில் அமர வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவருக்கு விருப்பமான இடம் தான் வழங்கப்பட்டு உள்ளது. எனவே, இதை அவர் ஏற்றுக்கொள்வார்.'எதிர்க்கட்சிகள் அதிக நேரம் பேச அனுமதிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை' என, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை, அ.தி.மு.க.,வினர் கொடுத்துள்ளனர். இதற்கு சபையில் பலமுறை விளக்கமான பதில் கூறியுள்ளேன்.முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்தான், சபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. யார் பேசுவதையும் காட்டக்கூடாது என்ற குறுகிய எண்ணத்துடன், அரசு செயல்படவில்லை. முன்னர், பொதிகை தொலைக்காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்போது செய்தித்துறை வாயிலாக, சபை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அனைவர் பேசுவதும் வருகிறது. அவர்கள் பேசுவதை மட்டும் பார்க்க விருப்பப்பட்டால், என்ன செய்ய முடியும்?பொதிகை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய, 50 லட்சம் ரூபாய், 60 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. குஜராத்தில், பிரதமர் பிரசார நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி கொடுத்துவிட்டு, அங்கு சென்று விட்டனர். முறையான ஒத்துழைப்பு தராததால், நாங்களே நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.சபாநாயகர் மீது பல சந்தர்ப்பங்களில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அ.தி.மு.க., கொடுத்த கடிதம் குறித்து சபையில் முடிவு செய்வர்.இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை