உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதவிப்பேராசிரியர் பணி: மே 15 வரை அவகாசம்

உதவிப்பேராசிரியர் பணி: மே 15 வரை அவகாசம்

சென்னை: அரசு கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், அரசு கல்வியியல் கல்லுாரிகள் ஆகியவற்றில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வு வழியாக நேரடி நியமனம் செய்ய, மார்ச் 14ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 'ஆன்லைன்' வழியே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட, பல்வேறு கோரிக்கைகள் அடிப்படையில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி, ஏப்., 29ல் இருந்து மே 15 மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை