உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முறைகேடுகளுக்கு உடன்படுவோரை கமிஷனர்களாக நியமிக்க முயற்சி: பா.ம.க.,

முறைகேடுகளுக்கு உடன்படுவோரை கமிஷனர்களாக நியமிக்க முயற்சி: பா.ம.க.,

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:சேலம் மாநகராட்சி கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரியான இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் விதிமீறல் நடந்துள்ளது. ஆட்சியாளர்களின் விருப்பங்களை, எதிர்கேள்வி எழுப்பாமல் நிறைவேற்றுபவர் என்பதால், அவர் நியமிக்கப்பட்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளின் நிர்வாகத்தை, மேம்படுத்துவதற்கு பதிலாக, முறைகேடுகளின் களமாக மாற்ற, தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.சேலத்தை போலவே, மிக முக்கிய மாநகராட்சிகளின் கமிஷனர்களாக, ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரிகள், சமீப காலமாக நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல், வரி வருவாய் ஈட்டும் மாநகராட்சிகளில் ஒன்றான, ஓசூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த ஸ்ரீகாந்த், கடந்த ஜனவரியில் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார். அதன்பின் அவர் மயிலாடுதுறை கலெக்டராக நியமிக்கப்பட்டார். தற்போது ஓசூர், ஈரோடு மாநகராட்சி கமிஷனர்களாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அல்லாதவரை நியமிக்க, முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள காரணங்கள், தமிழக நலனுக்கு நன்மை சேர்ப்பதாக இல்லை.இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், முறைகேடுகளுக்கும், விதி மீறல்களுக்கும் உடன்பட மாட்டார்கள் என்பதால், ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரிகளை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நேர்மையான அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை, சேலம் கமிஷனர் இளங்கோவன் நியமனத்தில், தமிழக அரசு காட்டிய வேகமும், விதி மீறல்களும் உறுதி செய்கின்றன.நேர்மையான அதிகாரிகளுக்கு, தண்டனை பதவியும், முறைகேடுகளுக்கு ஒத்துழைக்கும் அதிகாரிகளுக்கு, செல்வாக்குள்ள பதவிகளும் வழங்கப்படுவது, நல்லாட்சியின் அடையாளம் அல்ல. தமிழகத்தில் உள்ள, 25 மாநகராட்சிகளில், 13ல் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கமிஷனர்களாக உள்ளனர். அனைத்து மாநகராட்சி கமிஷனர் பணியிடங்களுக்கும், நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் நியமனத்தை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மார் 10, 2025 09:17

கழகங்களின் ஆட்சி எப்போது நல்லாட்சியாக இருந்திருக்கிறது? அதிலும் தி முன்னேற்ற கழகத்தை சொல்லவே வேண்டாம். சமூக நீதி முகமூடி அணிந்த கொள்ளையர்கள். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்துக்கொண்டு உள்ளனர். மக்கள் உட்பட அனைவரையும் தங்களுக்கு சாதகமாக, நேர்மையற்றவர்களாக மாற்றி வருகின்றனர். உண்மையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க செய்ய வேண்டும். அதற்க்கு இவனுக சொத்தையெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும்.


GMM
மார் 10, 2025 07:54

இந்திய ஆட்சி பணி அதிகாரத்தை அரசியல் கட்சிகள் நியமிக்கும் அதிகாரிகள் செலுத்த முடியாது. ஊழியர்களை வேலை வாங்க முடியாது. வார்டு உறுப்பினர்கள் மதிக்க மாட்டார்கள். ஆளும் கட்சிக்கு சாதகம். மக்களுக்கு பாதகம். சட்ட சிக்கல் ஏற்படும். மாநகராட்சி கமிஷனர் ஐ. ஏ. எஸ். தேர்வு பெற்றவர்கள் மட்டும் நியமிக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஏற்புடையது.


Minimole P C
மார் 10, 2025 07:40

This is not new to TN. Even MGRs period good officers were transferred to useless posts and some of the them even resinged from their IAS posts. Eg. One O R Rao a direct IAS, because of MGRs interference he resigned from his post and started his school. But this trend got increased in exponential during KK, JJ and subsequents CMs periods. The vigilence deparment is defunt for the last of 4 decades and that is the reason TN is a pioneer and a trend setter for whole India in corruption.


saravan
மார் 10, 2025 07:11

மாவட்ட ஆட்சியர்களே, அவங்க பேச்சை கேட்கிற மாதிரி, TNPSC முடிச்சி வர்ற Conferred IAS தானே இருக்காங்க...Direct IAS மிக மிக குறைவே...மத்திய அரசின் நடவடிக்கை இவ்விசயத்தில் தேவை...


Premanathan Sambandam
மார் 10, 2025 08:18

நேரடி IAS மட்டும் பெரிதாக சாதித்து விட முடியுமா? எல்லாம் அரசு சொல்படிதான் நடக்க வேண்டும் நிலைமை புரியாமல் கமெண்ட் செய்யாதீர்கள்


பிரேம்ஜி
மார் 10, 2025 07:05

வெத்து அறிக்கை அன்புமணி! ஆட்சி அதிகாரம் இல்லை! கை ரொம்ப அரிக்கிறது! டாக்டர் வேலை தெரியாது. பொழுதுபோக தினமும் அரசைக் குறை சொல்லி ஒரு அறிக்கை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை