உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி காலத்தில் தீய அரசியல் துவங்கியது: சீமான் போட்டு தாக்குகிறார் !

கருணாநிதி காலத்தில் தீய அரசியல் துவங்கியது: சீமான் போட்டு தாக்குகிறார் !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கருணாநிதி காலத்திற்கு பின்னர்தான் தீய அரசியல் துவங்கியது ' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த சீமான்; ' இவர் கைதுக்கான காரணம் என்ன?. என்னை விடவா அவர் பேசிவிட்டார். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்னை கைது செய்து பாருங்கள். என்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்கின்றனர்.

பாடல் பாடியசீமான்

' கருணாநிதி குறித்து கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடல் உள்ளது. நான் பாடல் பாடுகிறேன். என் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். 'கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி! சதிகாரன் கருணாநிதி!' என நான் பாடுகிறேன் என்று சீமான் பாடல் பாடி காட்டினார். என் மீது முடிந்தால் வழக்குப்பதிவு செய்யுங்கள். நீங்க பிள்ளைப்பூச்சியை பிடித்து விளையாடுவீர்கள். தேள், பாம்புவை பிடிப்பீர்களா?. புலி, சிங்கத்துடன் மோதுவீர்களா?. முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசவே கூடாதா?.

தீய ஆட்சி

நீங்க ஆட்சிக்கு வந்ததால் உங்க அப்பாவை புனிதர் ஆக்க முயற்சிக்கிறீர்களா?. தமிழினத்திற்கு செய்த துரோகம் எல்லாம் மறந்து போய்விடுமா? இந்த நாட்டில், தமிழர் இன வரலாற்றில், தீய ஆட்சி மற்றும் தீய அரசியலின் துவக்கம் கருணாநிதி காலத்தில்தான். இதனை யாராலும் மறுக்க முடியுமா? அண்ணாத்துரை இருந்த வரை உள்ள அரசியலை எடுத்து பாருங்கள். எவ்வளவு நாகரீகம், கண்ணியம் இருந்தது என்று பாருங்கள்.

ஊழல், லஞ்சம், கொலை

கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவதூறு பேச்சுகள். அநாகரீக அரசியல், சாராயம் வந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசவே கூடாதா?. முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து ஸ்டாலின் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது. நீங்கள் பேசலாம். அது கருத்துரிமை. நாங்கள் பேசினால் அவமதிப்பா?. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

V RAMASWAMY
ஜூலை 14, 2024 19:55

உண்மையை புட்டு புட்டு வைக்கிறார். பலே, சபாஷ்.


M Ramachandran
ஜூலை 13, 2024 20:23

MGR கொடுத்த பட்டம் நிலைத்து நீடித்து பரமபரைக்கும் நிற்கும்


K.Muthuraj
ஜூலை 13, 2024 19:36

நீங்கள் கருணாநிதி, தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் , எம் ஜி ஆர் பற்றியோ காமராஜர் பற்றியோ ஜெயலலிதா பற்றியோ இந்திரா காந்தி பற்றியோ பேசிய பேச்சுக்களை கேட்டதில்லை என்று நினைக்கிறேன்.


Dominic
ஜூலை 13, 2024 13:33

அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசும் தலைவன் என சொல்லிக்கொள்ளும் உண்போண்டவ்ர்கள் அரசியல் தலைவனை வந்த பின்னர் நாடு மிக நிலைக்கு வந்து விட்ட்து,


Godyes
ஜூலை 13, 2024 07:26

இப்ப இப்படி பேசிட்டு பின்னால சைடு வாங்குவியாப்பா.


Rajan Gandhi
ஜூலை 12, 2024 12:25

அண்ணே வாங்குற காசுக்கு மேலயும் கூவுறீங்களேண்ணே.. .உங்கள் தொழில் பக்திய பாராட்டியே ஆகனும்ணே....


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
ஜூலை 12, 2024 07:27

இதே சீமான் முன்பு ஒருமுறை திமுக தலைவர் கலைஞர் ஐயா போன்ற மாபெரும் தலைவர்களை இழிவாகப் பேசக்கூடாது என்றும் கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும் என்றும் கருத்து வேறு கருத்து வெறுப்பு வேறு மனித வெறுப்பு வேறு அரசியல் மாறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அதையும் தாண்டி மனித மாண்பு பண்பு என்ற ஒன்று இருக்க வேண்டும் அதுதான் அரசியலில் புனிதமானது அதை இங்குள்ள தமிழக அரசியல்வாதிகள் நினைவில் கொள்ள வேண்டும் என திருவாய் மலர்ந்துள்ளார் இப்போது அப்படியே மாற்றி உல்டாவா பேசுகிறார் என்ன செய்வது இவருக்கு பின்னாலும் ஒரு தற்குறிக் கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது அந்த தற்குறித் தம்பிகளுக்கு அறிவு வந்து இவரது சுயரூபம் தெரியும்வரை இந்த சீமான் இப்படித்தான் எதையாவது மாற்றி மாற்றி பேசிக் கொண்டும் உளறிக் கொண்டும் இருப்பார்.


Ganesun Iyer
ஜூலை 11, 2024 20:06

திடீர்னு ...அப்பன் கருணாநிதி.. தந்தை கருணாநிதின்னு பேச்ச மாத்திடுவார்...


Velan
ஜூலை 11, 2024 18:38

கைது செய்ய முடியாத அரசுகள்


Gopal,Sendurai
ஜூலை 11, 2024 18:22

சீமானுடைய பேச்சை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை இப்போது கருணாநிதியை திட்டும் இவர் இன்னும் கொஞ்ச நாளில் அவருக்கு புகழாரம் சூட்டி பேட்டியளிப்பார். முன்னுக்குப் பின் முரனாக பேசுவதே இவரது பிழைப்பு.


nav
ஜூலை 11, 2024 19:03

unmai


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை