உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஹிந்து கருத்தியல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது: எச்.ராஜா பேச்சு

தமிழகத்தில் ஹிந்து கருத்தியல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது: எச்.ராஜா பேச்சு

கோவை மாவட்டம், துடியலூர் பஸ் ஸ்டாண்டில் கோவை வடக்கு ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகளின் சார்பில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. இதில், தமிழக பா.ஜ.க., ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா பேசுகையில், எந்த நாட்டில் உள்நாட்டு கலாச்சாரம் ஒழிக்கப்படுகிறதோ அந்த நாடு, தீய சக்தியின் கையில் போய் சேர்ந்து விடும். அத்தகைய சிக்கலை மேற்கத்திய நாடுகள் சந்தித்து வருகிறது. பள்ளிக்கூடத்தில் ஆன்மிகம் குறித்து பேசினால் தப்பில்லை. இதுவரை ஹிந்து விழாக்களுக்கு தடை போட்ட கும்பல், இப்போது ஹிந்து கருத்தியல்களுக்கு தடை போடுகிறது. பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்களுக்கு சுதந்திர உணர்வு ஊட்ட தேசபக்தி விழாவாக கொண்டாடினார் என, பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

T.sthivinayagam
செப் 09, 2024 21:46

ஸ்டாலின் இந்துத்துவாளுகளுக்கு எதிரானர் என்று கூறும் பாஜக அரபு நாட்டு அதிபர்களுக்கு எப்படி வரவேற்ப்பு அளிக்கிறது ஆர்ஸ்ஸ் கொள்கையை மீறுகிறதா பாஐக அல்லது ஆர்ஸ்ஸ் இரட்டை வேடமா என மக்கள் கேட்கின்றனர்


புதிய வீடியோ