உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.இ.,-- - பி.டெக்., 2ம் ஆண்டு 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பி.இ.,-- - பி.டெக்., 2ம் ஆண்டு 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை:பி.இ., - பி.டெக்., படிப்புகளில், நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, நாளை மறுதினம் வரை விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான கலந்தாய்வு, ஆண்டு தோறும் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லுாரியில் நடந்து வருகிறது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி, அண்ணா பல்கலை, சுயநிதி பொறியியல் கல்லுாரிகளில், 6,000 இடங்களுக்கான விண்ணப்ப பதிவு, ஜூன் 8 முதல் நடந்து வருகிறது. நாளை மறுதினம் விண்ணப்ப பதிவு முடிகிறது.இந்த மாத இறுதியில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்ப சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக நடப்பதால், மாணவர்கள் நேரில் வர தேவையில்லை. கலந்தாய்வும் இம்மாதம் ஆன்லைன் வாயிலாக நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ