உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் பிசினஸ் வருமானத்தில் பெங்களூருவில் பிரியாணி ஷாப்; 15 பெண்கள் மீட்பு

பாலியல் பிசினஸ் வருமானத்தில் பெங்களூருவில் பிரியாணி ஷாப்; 15 பெண்கள் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: 'வாட்ஸ் ஆப்' குழு துவக்கி, வெளிநாட்டு பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 15 பெண்கள் மீட்கப்பட்டனர்.

கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் ( வடக்கு) கூறியதாவது:

கோவை மாநகரில், நட்சத்திர ஓட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக புகார் வந்தது. தனிப்படை போலீசார் விசாரித்தனர். புரோக்கர்கள் தேனியைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா,41, ஊட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், 30 கைது செய்யப்பட்டனர். மேலும் ஏழு பேர் தேடப்படுகின்றனர்.இந்த கும்பல், வெளிநாட்டு பெண்களை அடையாளம் கண்டு விபசார தொழிலில் ஈடுபடுத்த, 'ஆல் இந்தியா ஏஜென்ட்' என்ற பெயரில் 'வாட்ஸ் ஆப் குழு' ஏற்படுத்தியுள்ளனர். டில்லியை சேர்ந்த கபீர்சிங் என்பவர் தலைமையில், 117 ஏஜென்டுகள், வாட்ஸ் ஆப் குழுவில் உள்ளனர். இந்தியா மற்றும் ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து நாட்டு பெண்களை ஈடுபடுத்தி உள்ளனர். இவர்களில், 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 10 சிம்கார்டுகள், 16 மொபைல் போன், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிக்கந்தர் பாதுஷா மீது, கோவை, சென்னை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏஜென்ட்களாக செயல்பட்டு வரும். 117 நபர்களை பிடிக்க 12 பேர் கொண்ட நான்கு தனிப் படைஅமைக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் கிடைத்த லாப பணத்தில், சிக்கந்தர் பாதுஷா பெங்களூருவில் பிரியாணி கடை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.இவ்வாறு துணை கமிஷனர் ஸ்டாலின் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

RIfay
செப் 14, 2024 16:59

தவறு செய்பவனுக்கு மத அடையாளத்துடன் தொடர்பு இல்லை மாட்டு கறி வைத்து இருந்தாக கூறி மனிதனை கொல்கிறார்கள் ஆனால் மாட்டு கறி ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது


Rasheel
செப் 10, 2024 21:09

அமைதி வழியில் அன்பை பெருக்க முயற்சி செய்தனர். இது தவறா


ram
செப் 10, 2024 17:01

இவனுக எதையும் விட்டு விட மாதங்கள் போல, கேட்ட அமைதி அன்பு என்று கூறி கொள்ளூங்கள், இவர்கள் எதற்கு சிறுபான்மை சலுகைகள் ஹிந்துக்கள் பணத்தில்


shakti
செப் 09, 2024 22:11

இது அமைதி மார்க்கம் , அன்பு மார்க்கம் கூட்டணி போல.. விளங்கிடும் ...


Muthu Kumar
செப் 08, 2024 19:22

எங்கு எந்த க்ரைம் நடந்தாலும் அதில் 'மர்ம நபர்கள்' பங்கு அளப்பரியது


karupanasamy
செப் 08, 2024 13:54

அந்த புத்தக ஆசிரியரும் இதையேதான் செஞ்சாரு.


Lion Drsekar
செப் 08, 2024 13:06

சில நாடுகளின் பொருளாதாரமே இதுபோன்றவர்களால்தான் . காலத்தின் ஓலம், வந்தே மாதரம்


தமிழ்வேள்
செப் 08, 2024 12:14

புற்றீசல் போல பெருகும் திருச்சபைகள் ஜமாஅத் களை கட்டுப்படுத்தாமல் சமூகத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவதோ தேச விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதோ சாத்தியம் இல்லை.... தேசிய மதம் என்பது இயற்கைப் பாதுகாப்பு..அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.... அந்நிய நாட்டு மதங்கள் தேசப்பற்று உடையவை அல்ல...பாவம் என்பதை வைத்து சம்பாதனை செய்பவை


abdulrahim
செப் 08, 2024 11:08

அங்க போனவனுங்க எல்லாம் உங்க ஆளுங்க தானே அப்போ திருப்பதியிலும் சபரி மலையிலும் இதுதான் போதிக்கப்படுகிறதா ?


நிக்கோல்தாம்சன்
செப் 08, 2024 15:47

ஓஹோ ஜாபர் சாதிக் , சிக்கந்தர் எல்லாம் தமிழகத்தை வெளிச்சமாக்க வந்த பாலைவனத்தினர் அல்லவா , அதனால் தான் அவர்களின் இறைவழிபாட்டு தளத்தை இங்கே இழுத்து விட்டுளீர்கள் , இங்கே குற்றம் செய்தவன் உனது மதத்தினன் , எனது மதத்தினன் , எதற்கு அவர்களின் மதத்தினை இங்கே இழுத்துளீர்கள் , இதனை தான் உங்களிடம் போதித்துள்ளார்களா


நிக்கோல்தாம்சன்
செப் 08, 2024 11:01

அமைச்சர் ஒருவர் கண்ணில் இதனை படாமல் பார்த்துக்கொள்ளும் , இல்லையென்றால் அதனையும் இங்கே அபிஷியல் பிசினெஸ் ஆக்கிடுவானுங்க இழிபிறப்புங்க


புதிய வீடியோ