மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
நாகர்கோவில்:கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய, மாநில குழுக்கள் இணைந்து நடத்திய ஆய்வில் பா.ஜ., கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பு வளர்ச்சி பெற்று உள்ளது தெரியவந்துள்ளது.லோக்சபா தேர்தலில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 18-ல் காங்., கூட்டணி வென்றது. பா.ஜ., மா. கம்யூ., தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றன. மாநிலத்தில் ஆளுங் கட்சியாக இருந்த மா.கம்யூ, வுக்கு ஏற்பட்ட படுதோல்வி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. தோல்விக்கான காரணங்கள் குறித்து கருத்து கேட்கும் கூட்டத்தில் அமைச்சர்கள் மீது நிர்வாகிகளே குற்றம் சாட்டினர். இறுதியில் ஆய்வறிக்கை மத்திய குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்தியில் காங்கிரசால் மட்டுமே பா.ஜ.,வை எதிர்கொள்ள முடியும் என்ற மக்களின் எண்ணம் தான் மா.கம்யூ., தோல்விக்கு முக்கிய காரணம். நிதி நெருக்கடியால் சமூக நல ஓய்வூதியங்கள் நிறுத்தப்பட்டதும், கோயில்கள், மதம், சமூக அமைப்புகளை பயன்படுத்தி பா.ஜ.,மற்றும் ஆர்.எஸ்.எஸ், செயல்பட்டதும் தோல்விக்கு காரணம். சில சமூகங்களை ஊடுருவி செல்ல மத்திய திட்டங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதனை பினராயி அரசால் தடுக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் மா.கம்யூ. ஓட்டு சதவீதம் 35.10 சதவீதமாக இருந்தது. 2024 தேர்தலில் 33.5 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 1.75 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளது.அதே நேரத்தில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் வாக்கு சதவீதம் 2014- ல் 10.8 சதவீதமாக இருந்தது. 2019-ல் இது 15.48 ஆக அதிகரித்து 2024 -ல் 19. 2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ. ஓட்டு சுமார் பத்து சதவீதம் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.இது அக்கட்சியின் இரட்டிப்பு வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.பல தொகுதிகளிலும் குறிப்பாக ஆற்றிங்கல், ஆலப்புழா உள்ளிட்ட தொகுதிகளில் மா.கம்யூ., ஓட்டுகள் பா.ஜ., வுக்கு சென்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago