உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதிவு வழங்க தாமதம் மருத்துவ கவுன்சில் முற்றுகை

பதிவு வழங்க தாமதம் மருத்துவ கவுன்சில் முற்றுகை

சென்னை : சென்னை புரசைவாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை, 30க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சை தொடர்ந்து, ஐந்து மாணவர்கள் மருத்துவ கவுன்சிலில் மனு அளித்தனர். பின், மாணவர்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என, மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது:

உக்ரைன் நாட்டில், ஜனவரியில் மருத்துவ படிப்பை முடித்தோம். இந்திய தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளோம். ஆனால், மருத்துவ கவுன்சில், ஆறு மாதங்களாக, 'புரவிஷனல் சான்று' வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.எங்களை பதிவு செய்து சான்று வழங்கினால் மட்டுமே, ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்றி, முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு எழுத முடியும். மருத்துவ கவுன்சிலின் காலதாமதத்தால், மேல் படிப்பை தொடர முடியாத சூழல் உள்ளது. மற்ற மாநிலங்களில், எங்களுடன் தகுதி தேர்வை, 7,000த்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அவர்கள் பயிற்சி டாக்டர்களாக பணியாற்றும் நிலையில், தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற, 600 பேருக்கு சான்று வர தாமதமாவதால், பயிற்சி வகுப்பில் சேர முடியவில்லை. இதுபோன்று, பதிவு செய்வதில் ஏற்படும் காலதாமதத்தால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை