உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறுதி ஊர்வலத்தில் வாலிபர் உடல் மீட்பு

இறுதி ஊர்வலத்தில் வாலிபர் உடல் மீட்பு

கண்டமங்கலம் அருகே பரபரப்பு;கண்டமங்கலம்: கண்டமங்கலம் போலீஸ் சரகம் பள்ளித்தென்னல் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் மகேஷ் (எ) படையப்பா 25; இவர் நேற்று முன்தினம் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை மீட்டு நேற்று மாலை வில்லியனுார் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.தகவலறிந்த போலீசார் நேற்று மாலை 3.30 மணிக்கு வடமங்கலம் அருகே சென்ற சவ ஊர்வலத்தை வழிமறித்து உடலை மீட்டனர். அப்போது கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு வழியாக உடலை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமவனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி