உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவு வருவாய் ரூ.26,109 கோடி

பத்திரப்பதிவு வருவாய் ரூ.26,109 கோடி

சென்னை:'தமிழகத்தில் பத்திரப்பதிவு வாயிலாக, வரும் நிதியாண்டில், 26,109 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்' என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் பல்வேறு சமூகநல திட்டங்களுக்கு தேவையான நிதி, பத்திரப்பதிவு துறை வருவாய் வாயிலாக பெறப்படுகிறது. கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், பத்திரப்பதிவு வாயிலாக 23,370 கோடி ரூபாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. நடப்பு நிதி ஆண்டில், 30,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின், 2025 - 26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், பத்திரப்பதிவு வாயிலாக 26,109 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில், பதிவுத்துறையின் நடவடிக்கைகள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை