உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் காலை உணவு திட்டம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் காலை உணவு திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுதும் உள்ள, 3,995 அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்க திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.தமிழக அரசின் துவக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, முதல்வரின் காலை உணவு திட்டம், 2022 செப்., 15ல் துவங்கப்பட்டது. இதையடுத்து, 2023 ஆக., 25ல், திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 30,992 அரசு துவக்கப் பள்ளிகளில், 18.5 லட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். காலை உணவு திட்டத்திற்கு, மாணவர்கள், பெற்றோர் தரப்பில், நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.நடப்பாண்டு பட்ஜெட்டில், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கும், காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளான இன்று, திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.இதன் வாயிலாக, 3,995 அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் படிக்கும், 2.23 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனர். விழாவில், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 'முதல்வரின் காலை உணவு திட்டம் என்பதை, முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டம் என்று பெயர் மாற்ற வேண்டும்' என, சட்டசபையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர். இன்று நடக்கும் விழாவில், பெயர் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sampath Kumar
ஜூலை 15, 2024 08:48

தமிழக அரசுக்கு மிக நெற்றி இதுபோன்ற முன்னோடி திட்டத்தால் தமிழ்நாடு உலக ரங்கில் தலை நிம்ருது நிக்கிறது உங்கள் தொண்டு வளர்க்க தமிழ் நாடு


sankaranarayanan
ஜூலை 15, 2024 06:47

கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு பதில் காலை உணவு மத்திய உணவு என்று படிப்பைத்தவிர மற்ற எல்லா செயல்களும் பெருகி வருகின்றன பிறகு இதற்கு அரசியல் பெயர் வேறு வைப்பார்கள்


Kasimani Baskaran
ஜூலை 15, 2024 05:46

முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் ஒரு மாநிலத்தில் தான் பெற்ற பிள்ளைகளுக்கு காலை உணவு கூட கொடுக்க வக்கில்லாமல் இருப்பது போல விளம்பரப்படுத்துவது மகா மட்டமான அணுகுமுறை. பள்ளி உணவு விடுதி கிடையாது என்பதை விடியல் அரசு புரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ