உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!

ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், அப்பாவு கூறியதாவது: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும். நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை மட்டும் கேள்வி நேரம் இல்லை. வரும் மார்ச் 17ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடை பெறும். மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இது ஒன்னும் புதுசு கிடையாது. இது குறித்து சட்டசபையில் முடிவு எடுக்கப்படும். சபையில் யார் பேசுவதையும் காட்டக் கூடாது என்ற குறுகிய எண்ணத்துடன் அரசு செயல்படவில்லை; தொழில்நுட்ப கோளாறால் கடந்த முறை அப்படி நடந்தது. இனி அப்படி நடக்காது. இவ்வாறு அப்பாவு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அஜய் சென்னை இந்தியன்
மார் 15, 2025 08:26

என்ன இந்த ஐந்து ஆண்டுகளில் என்ன பெரிதாக செய்து விட்டார்கள் என்று இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை ஏப்ரல் 30 வைக்க முடிவு செய்து உள்ளார்கள். இன்று மார்ச் 15 தான் ஆகிறது. இன்னும் 45 நாள்களுக்கு என்ன அப்படி இந்த பட்ஜெட் பற்றி பேச என்ன இருக்கிறது. மத்திய பட்ஜெட் வையே ஒரு இரு நாளில் சொல்லி, விவாதம் செய்து முடித்து விடும் நிலையில், ஒரு மாநில அரசு பட்ஜெட் கூட்டத்தொடரை 50 நாள் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. மக்கள் எல்லோரும் மூட்டால் என்று எண்ணி கொண்டு இருக்கிறார்கள் போல் உள்ளது. இலவசம், உதவி தொகை வைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு அதிகம் மாக இருக்கிறது. ஆனால் ஒன்று தமிழகத்தில் மக்கள் மனநிலை மாறாத வரை இப்படி பட்ட கேவலமான அரசியல் நடந்து கொண்டு தான் இருக்கும்.


Murugesan
மார் 14, 2025 17:41

கருணாநிதி குடும்ப அயோக்கியனுங்களை கூட்டத்தொடர் முழுவதும் காலை கழுவிக் குடிப்பானுங்க


Anand
மார் 14, 2025 16:42

கூட்டத்தொடர் முடியும் வரை அப்பன் மகனை புகழும் தொடராகவே இருக்கும்....


Petchi Muthu
மார் 14, 2025 16:27

பட்ஜெட்டில் பெரிதாக அறிவிப்புகளுக்கு வெளியாகவில்லை மக்களுக்கு பயன்படும் வகையில், இதனால் கூட்டத்தொடர் நடந்து என்ன பலன் கிடைக்க போகுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை