உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கலாமா: சசிகலா ஆவேசம்

தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கலாமா: சசிகலா ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க., முடிந்து விட்டது என நினைக்க முடியாது; என் என்ட்ரி ஆரம்பித்துவிட்டது; வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம்,'' என, சசிகலா கூறினார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க., தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. அதற்கு, ஒரு சில சுயநலவாதிகள் தான் காரணம். ஜெயலலிதா ஜாதி பார்க்க மாட்டார். அப்படி ஜாதி பார்த்திருந்தால், உயர் ஜாதியைச் சேர்ந்த அவர், என்னிடம் பழகி இருக்க முடியாது.அ.தி.மு.க.,வில் சாதாரண ஏழை கூட பதவிக்கு வரலாம். ஆனால், தி.மு.க.,வில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. தி.மு.க.,வில் குடும்பத்தில் உள்ள வாரிசுகளை பதவிக்கு கொண்டு வருவர்.அ.தி.மு.க.,விலர் சிலர், ஒரு குறிப்பிட்ட ஜாதி அரசியலுக்குள் செல்கின்றனர். ஜாதி அரசியல் நடத்த ஆசைப்பட்டால், அவர்கள் தனியாகச் சென்று செய்யலாம். நான் ஜாதி பார்த்திருந்தால், பெங்களூருக்கு செல்லும்போது, பழனிசாமியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்திருக்க மாட்டேன். அ.தி.மு.க.,வுக்கு மேற்கு மாவட்ட மக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். எனவே, எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்பதால், அவருக்கு முதல்வர் பதவி தந்தேன்.அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கும், நான்காவது இடத்திற்கும் சென்று விட்டது. தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கக் கூடாது. அ.தி.மு.க., முடிந்து விட்டது என நினைக்க முடியாது; என் என்ட்ரி ஆரம்பித்து விட்டது. வரும் 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். விரைவில் பட்டிதொட்டியெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது சரியில்லை. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., தான். கோடநாடு கொலை வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது. தேர்தலுக்கு தேர்தல் கோடநாடு பற்றிய பேச்சு வந்தாலும், முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை.இவ்வாறு சசிகலா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

MADHAVAN
ஜூன் 18, 2024 10:30

எடப்பாடி கவுண்டருக்காக சாதிக்கட்சி நடத்துற னு இந்தமம்மா சொல்லுது


karutthu
ஜூன் 18, 2024 09:24

நீங்கள் வந்தால் பொது செயலாளர் பதவி கேட்கக்கூடாது ஒரு சாதாரண தொண்டனாக இருக்கவேண்டும் அது உங்களால் முடியாது உங்கள் எண்ணம் கட்சியில் நுழைந்து நேரடியாக பொது செயலாளர் ஆகவேண்டும் ஆகையால் கட்சிக்கு நீங்கள் சரிப்பட்டு வரமாடீர்கள் .ஆகையால் உங்களுக்கு ஆ திமு காவில் இடமில்லை


naranam
ஜூன் 17, 2024 19:47

ஜெயலலிதாவின் முடிவுக்கும், தலை குனிவுக்கும் மூல காரணமாக இருந்தவர்கள் இவரும் இவருடைய ஒட்டுண்ணிக் குடும்பங்களும் ஆவர்.


venugopal s
ஜூன் 17, 2024 11:55

இவர் ஆரம்பித்து வைத்ததை எடப்பாடி முடித்து வைக்கப் போகிறார்!


Ramesh Sargam
ஜூன் 17, 2024 11:54

காங்கிரஸ் கட்சியைப்போல அதிமுகவும் மூழ்கும் கப்பல். அந்த மூழ்கும் கப்பலில் இந்த சின்னம்மா என்ட்ரி கொடுத்து என்ன பிரயோஜனம்?


GMM
ஜூன் 17, 2024 11:48

ஜெயா சாதி பார்ப்பது இல்லை. சசி சாதி பார்க்காமல் இருந்தது இல்லை. கட்சிக்கு வருவதற்கு முன் உங்கள் சொத்து மதிப்பு கூற முடியுமா? பன்னீர், தினகரன், இளவரசி... எல்லோரும் எந்த சாதி? எப்படி இவ்வளவு சொத்து? எடப்பாடி செல்வாக்கு இழந்து விட்ட பின் இடை தேர்தல் கண்டு அச்சம். கட்சியின் பணம் சிலரால் அபகரிக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். அண்ணா திமுகவில் அடுத்த கட்ட தலைவர் இல்லை. சசி நுழைவு ஆமை புகுந்த வீடு போல் கட்சி ஆகும். திமுகவில் தலைவர்கள் அதிகம். தொண்டர்கள் குறைவு. காங்கிரஸ் நிரந்தர தொண்டர்கள் உண்டு. தனித்து போட்டியிட துணிவு குறைவு. கம்யூனிஸ்ட், நாம் தமிழர்... இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழர்கள் நல்ல அரசியல் கட்சி வரவை எதிர்பார்த்து எங்கும் நேரம்.


Sree
ஜூன் 17, 2024 11:46

தினகரன் நீங்கள் பன்னீர் மூவரும் பொதுக்குழு மூலமே வரவேண்டும் பழனிசாமி + பன்னீர் இருவரும் ஒரே அணியில் இருந்த வரை ஒரு குழப்பம் இல்லை பண்ணீர் பண்ணீர் வெளியேறி குழப்பம் வந்ததோ அப்போவே பிரச்னை


Sampath Kumar
ஜூன் 17, 2024 11:41

ஹி ஹி வேணாமும்க உங்க என்ட்ரி வந்தா உங்க காட்சிலே குழப்பமோ குழப்பம் வரும்ங்க யாரு சொல்லறத்தையும்யாரும் கேக்க மாட்டானுக அப்புறம் நீங்க வந்து அசிங்க படவேண்டி வருமுங்க அம்புட்டு தான் கடையை மூடுங்க இல்ல இருக்கவே இருக்கு பிஜேபி காரன்கிட்ட அடுக்கு வைங்க வேற வள்ளி இல்லை


Murugesan
ஜூன் 17, 2024 10:08

அதிமுகவை அழித்த நீங்கதான் உங்களுடைய பதவி சுகத்திற்காக தகுதியற்ற அயோக்கியங்களை அமைச்சர்களாக்கியதினால் சிறையில களி தின்ன தீயசக்தி திருட்டு அயோக்கிய திமுகவிடம் இப்ப ஆட்சியையும் பறிகொடுத்து விட்டு அடிமை கூட்டு களவானிகளாகி தமிழகத்தை சீரழித்துக்கொண்டுள்ளனர், மக்களுக்காக பணத்தில கொள்ளையடித்து வாழுகின்ற சுயநலவாதி


mindum vasantham
ஜூன் 17, 2024 10:01

எடப்பாடி திமுக பி டீம் தினகரன் பெட்டெர் தமிழர்களை கிறிஸ்துவராக மாற்ற துடிக்கிறார் எடப்பாடி


மேலும் செய்திகள்