உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை காளான் வைத்திருந்ததாக வழக்கு: சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கிறது

போதை காளான் வைத்திருந்ததாக வழக்கு: சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கிறது

மதுரை:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சாலமன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலர் போதைக்காளான் வைத்திருந்ததாக, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்தனர்.சாலமன், ஜெயந்தி, விக்டோரியா ராணி, ெஹலன் மேரி, பிரிகெட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற உத்தரவிடக்கோரி ெஹலன்மேரி மற்றொரு மனு செய்தார்.அந்த மனுவில் அவர் கூறியதாவது:மனுதாரர் தரப்பு: கொடைக்கானலில் ஒரு மிஷனுக்கு சொந்தமான வீட்டில் சாலமன் வசிக்கிறார். இச்சொத்து, மிஷனால் மனுதாரரின் மூதாதையர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. அந்த சொத்து, 3 ஏக்கரில், நான்கு பங்களாக்களை கொண்டது.சொத்தின் மீது சி.எஸ்.ஐ., சர்ச் நிர்வாகம் உரிமை கோரியது. சொத்திலிருந்து சாலமனை வெளியேற்ற சி.எஸ்.ஐ., சர்ச் நிர்வாகம் முயற்சித்தது. போதை காளான் வழக்குகள் பதியப்பட்டன.இவ்வாறு கூறினார்.அந்த மனுவை, நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.நீதிபதி: மனுதாரர்களிடம் போதைக் காளான் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை. மனுதாரர்களை சொத்திலிருந்து வெளியேற்றும் நோக்கில், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மனுதாரர்களுக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.மனுதாரர்களுக்கும், சி.எஸ்.ஐ., சர்ச் நிர்வாகத்திற்கு இடையே சொத்து பிரச்னை உள்ளது. மனுதாரர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனுதாரர்கள் முன்ஜாமின் பெற்று உள்ளனர். முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி, சி.எஸ்.ஐ.,நிர்வாகம் தாக்கல் செய்த மனுவும் தோல்வியில் முடிந்தது.போதைக்காளான் வைத்திருந்ததாக மனுதாரர்களுக்கு எதிராக கொடைக்கானல் போலீசார் பதிந்த வழக்கை,, மேல் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்ற டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை