உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியன்-2 படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

இந்தியன்-2 படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை:இந்தியன் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கை மதுரை 4 வது கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மதுரை எச்.எம்.எஸ்.காலனி மஞ்சா வர்மக்கலை தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: இந்தியன் 2 திரைப்படத்தில் வர்மக்கலை முத்திரை இடம் பெற்றுள்ளது. அது எங்களுக்கு சொந்தமானது. முத்திரையை பயன்படுத்த எங்களிடம் அனுமதி பெறவில்லை. நன்றி தெரிவித்து படத்தில் எனது பெயர் இடம்பெறச் செய்ய வேண்டும். படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி செல்வமகேஸ்வரி விசாரித்தார்.ஷங்கர் தரப்பு: அகஸ்தியர் தோற்றுவித்த வர்மக் கலைக்கு தனி நபர்கள் யாரும் உரிமை கோர முடியாது. இது தனிப்பட்ட கலை அல்ல. இந்தியன் 2விற்கும் மனுதாரருக்கும் தொடர்பில்லை. அதில் வேறொரு ஆசான் மூலம் வர்மக்கலை காட்சிகள் படமாக்கப்பட்டன. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி