| ADDED : மே 27, 2024 04:33 AM
சென்னை தி.நகர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியாவும், அவரது சகோதரி சுமதி மற்றும் ராமச்சந்திரன், மாயா ஒலி உள்ளிட்ட கும்பல், பள்ளி மாணவியரை மிரட்டி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி உள்ளனர். ஏற்கனவே சட்டவிரோதமாக பாலியல் வணிகத்தில் நதியா ஈடுபட்டவர் என்றும், கஞ்சா மற்றும் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தவர் என்றும் தெரிகிறது. தங்களிடம் சிக்கும் மாணவியரை, பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபடுத்தியதுடன், அதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளனர். நதியா மீது இரண்டு மாணவியர் புகார் அளித்துள்ளனர். இன்னும் எத்தனை சிறுமியர் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. எனவே, இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி, மூன்று மாத காலத்திற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைத்து பிரமுகர்களையும், பாரபட்சமின்றி விசாரித்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர்.