உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் 10ம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

வரும் 10ம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 10ம் தேதி முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வறண்ட வானிலை காணப்பட்டது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும். மார்ச் 9 வரை, இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. இன்று முதல் மார்ச், 9 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. மார்ச் 10, 11ம் தேதி, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒருசில இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை