உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடைகளின் பெயர் பலகையை தமிழில் மாற்றுங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

கடைகளின் பெயர் பலகையை தமிழில் மாற்றுங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கடைகளில் தமிழில் பெயர் பலகைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வணிகர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த வணிகர் நல வாரியம் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளுக்கான குத்தகை காலம் அதிகரிக்கப்படும். கடைகளின் பெயர் பலகையை தமிழில் மாற்ற வேண்டும். வீதிகளில் தமிழைக் காண முடியவில்லை என யாரும் சொல்லக்கூடாது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வணிகர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

ரூ.3.29 கோடி நிதி

வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது. வணிகர்கள் நலுனுக்காக திமுக ஆட்சிக்காலங்களில் எண்ணற்ற உதவிகளை வழங்கி உள்ளோம். வணிக உரிமங்களை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று திருத்தியுள்ளோம். வணிகர்களுக்காக ரூ.3.29 கோடி நிதி வழங்கியுள்ளோம். வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழந்தால், வழங்கப்படும் நிதி ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Ramesh Sargam
ஏப் 01, 2025 21:36

மீண்டும் தமிழ் பற்று இவருக்கு தலைக்கு ஏறி விட்டது.


V RAMASWAMY
ஜூலை 25, 2024 09:12

ஆஹா, எத்தனை எதிர்ப்புக்கள், இதனை வாக்களிக்கும்போது காட்டியிருந்தால், எத்துணை நன்மையாயிருக்கும்? பரவாயில்லை, முக்கியமான சட்டசபை தேர்தலில் உங்கள் ஏமாற்றங்களையும், எதிர்ப்புகளையும் காண்பியுங்கள், நாடும் மக்களும் முன்னேறட்டும்.


சூரியா
ஜூலை 24, 2024 09:14

உங்கள் அல்லக்கைகளை முதலில் சரியான தமிழில் போஸ்ட்டர் வைக்கச் சொல்லுங்கள்.


Ramesh.M
ஜூலை 23, 2024 23:17

"ஸ்டாலின்" .. அழகான தமிழ் பெயர். "சன் டிவி" அழகான தமிழ் பெயர், "ரெட் giant movies" அழகான தமிழ் பெயர். "சன் shine ஸ்கூல்" அழகான தமிழ் பெயர். ஆக நீங்கள் அனைவரும் சுத்த தமிழ் மொழியில் பெயர் வைக்கவும்.. என்னும் எத்தனை காலம் தான் இப்படி மக்களை இளிச்ச வாயன் ஆக்குவீங்க.


கட்டுமஸ்தான்
ஜூலை 23, 2024 22:35

முத்தமிழ் வித்தகருக்கு முதலில் மகனுக்கு தமிழில்.பேர் வெக்கத் தெரியலை..


Barakat Ali
ஜூலை 23, 2024 22:30

குடும்பத்தொலைக்காட்சியின் பெயர் ஆங்கிலத்தில் ........ பட நிறுவனத்தின் பெயர் ஆங்கிலத்தில் .... ஆகா ......


Barakat Ali
ஜூலை 23, 2024 21:55

துக்ளக்கித்தனமான அறிவிப்புகள் .........


N Sasikumar Yadhav
ஜூலை 23, 2024 21:40

முதல்ல ஒங்க திரைப்பட கம்பெனியின் பெயர் ஒங்க மகளின் பள்ளிக்கூட பெயர்களை சுத்தமான தமிழில் வைத்திடுங்க மற்றதை பிறகு பார்க்கலாம்


Matt P
ஜூலை 23, 2024 21:02

இவருக்கு கம்யூனிசம் மேல ஈர்ப்பு இருந்ததனால்,ரசிய தலைவர் ஸ்டாலின் பெயரை அந்த மொழியலியே வைச்சிருக்கார். கம்யூனிசத்துக்கும் கருணாநிதிக்கும் இன்னாப்பா தொடர்பு. பாரதி தாசன் பாடினர்...வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை... என்று பாடினர். அப்படிப்பட்ட வல்லாநா தானே இருந்தார். அதுவும் அடுத்தவன்பொதுமக்கள் பணத்திலே முன்னேறியவர் அடுத்த மகனுக்கு பட்டுக்கோட்டை அழகிரி பெயரை வைச்சிருக்கார். கண்ணதாசன் கூட அவர் பிள்ளைகளுக்கு அண்ணாதுரை, காந்தி என்று பெயர் வைத்தார்.இறக்குமதி பெயரை விரும்பியிருக்கார் ஸ்டாலின் வடமொழி பெயர் மாதிரி ஷ் இருந்து அழகா இருக்குனு


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 23, 2024 20:41

இன்னும் எத்தனை பொய்கள் சொல்லப்போகிறீர்கள் முதல்வரே? வணிகர்களுக்கு உதவிகளை? எதை உதவி என்று சொல்கிறீர்கள்? முனிசிபாலிடி தொழில்வரி முப்பது சதவிகிதம் ஏற்றியது? கடைகளுக்கு குப்பை வரி ஏற்றியது? உங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் விழாக்களுக்கு கட்டாய நன்கொடை வசூலிப்பதை?


மேலும் செய்திகள்