மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 72
கோவையில் தாயை பிரிந்த கருஞ்சிறுத்தைக்குட்டி உயிரிழந்த சோகம்
7 hour(s) ago | 2
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
10 hour(s) ago | 3
கோவை:சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், 'சவுக்கு மீடியா' என்ற யு டியூப் சேனல் நடத்தி பிரபலமானவர். இவர், 'ரெட்பிக்ஸ்' என்ற யு யூடிப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, அவதுாறு கருத்து தெரிவித்ததாக, கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 'ரெட்பிக்ஸ்' யு டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.சவுக்கு சங்கர் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட ஐந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். கோவை நீதிமன்றத்தில், இருவரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இருவரையும் ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் வாதிட்டார். பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமின்மனு ஏற்கனவே டிஸ்மிஸ் செய்யப்பட்டது.சவுக்கு சங்கர் மனு மீது நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, சங்கரின் ஜாமின் மனுவை மாஜிஸ்திரேட் சரவணபாபு 'டிஸ்மிஸ்' செய்தார்.
4 hour(s) ago | 72
7 hour(s) ago | 2
10 hour(s) ago | 3