மேலும் செய்திகள்
சிறார்கள் கையில் பட்டாக்கத்தி: திமுக அரசு மீது இபிஎஸ் கோபம்
4 hour(s) ago | 6
காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியது திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
7 hour(s) ago | 16
தெருவுக்கே காவல்காரன்எங்கள் வீட்டுக்கு மட்டுமல்ல, தெருவுக்கே காவல்காரன் ஜாக்கி என்கிறார், மதுரை, சங்கரநாராயணன் நகரை சேர்ந்த சோமசேகர்.''சிறிய குட்டியாக வந்த ஜாக்கிக்கு இப்போது வயது 9. இத்தனை ஆண்டுகளும், எங்களின் எல்லா சுக துக்கங்களிலும் பங்கேற்று இருக்கிறான். அவனும் எங்கள் வீட்டில் ஒருவனே. இரவில் துாங்கவேமாட்டான். இதனால் நாங்கள் மட்டுமல்ல, தெருவே நிம்மதியாக இருக்கிறது. அடையாளம் தெரியாதவர்கள் வந்தால், ஜாக்கியிடம் இருந்து மட்டும் தப்பவே முடியாது. செல்பி எடுக்க போனை இவன்முன் நீட்டினால், வித்தியாசமான ரியாக் ஷன்களை காட்டி போஸ் கொடுப்பான். வீடியோகாலில் யாராவது பேசினால், உடனே தன்னுடைய குரலையும் பதிவு செய்துவிடுவான். ஜாக்கி இருப்பதால் நாங்கள் வெளியிடங்களுக்கு, தைரியமாக செல்ல முடிகிறது'' என்கிறார் சோமசேகர். 'பார்க்க ரொம்ப சாது... கிளம்பினா புயல்தான்!''முன்னங்காலை துாக்கி சீறிக்கிட்டு நிக்கிற குதிரை பிரம்மாண்டத்தோட உச்சம். இத பாக்குறதுக்குன்னே சின்ன வயசுல, என் தாத்தாவோட அந்தியூர் குதிரை சந்தைக்கு போவேன். நீண்ட நெடிய போராட்டத்துக்கு அப்புறமா இப்பதான் குதிரை வாங்க முடிஞ்சது,'' என்கிறார், கோவையை சேர்ந்த குகன்கார்த்திக்.குதிரையோட உயரம், வேகம், மின்னும் வனப்பான தோல், வசீகரத்துக்காகவே, இளசுகளின் செல்லப்பிராணியாக இது மாறிவிட்டது. நாய், பூனை, பறவைகளை வீட்டுல வச்சு பராமரிக்கலாம். ஆனா.., குதிரையை?சொல்கிறார், குகன் கார்த்திக்...''வீட்டு பக்கத்துல குதிரைக்கு தனி இடம் இருக்கு. குதிரை எப்போதும் நடந்துக்கிட்டு, ஆக்டிவ்வா இருக்கறதால நிறைய ஸ்பேஸ் வேணும். நான் காலேஜ் படிக்கும் போது தான் குதிரை வாங்க, வீட்ல பர்மிஷன் கிடைச்சுது.குஜராத்- ராஜஸ்தான் எல்லையில் இந்த குதிரை வாங்குனேன்; கத்தியவாரி ப்ரீடு. இது பொண்ணுங்கறதால, நிலா-ன்னு பேர் வச்சோம். ஒன்றரை வயசா இருக்கும் போது வீட்டுக்கு வந்துச்சு. இப்போ, நாலரை வயசாகுது. ரொம்ப சாது. ஆனா, ரைய்டு கிளம்புனா, புயல் வேகம் தான். ஆரம்பத்துல மேல ஏறுனாவே, கீழ தள்ளிவிட்டுரும். இனிப்புன்னா ரொம்ப பிடிக்கும். அதனால, கடலைமிட்டாய் வாங்கி கொடுத்து தான் ரைய்டுக்கு பழக்குனேன், என்றார்.'கடலை மிட்டாயா...? வேற என்னெல்லாம் சாப்பிடும்?' எனக்கேட்க...''குதிரை மசால் புல், வரப்புல், பச்சைப்புல், மக்காச்சோளம் தட்டை, கடலைக்கொடி, வைக்கோல் புல் நல்லா சாப்பிடும். கம்பு, கோதுமை, ராகி, கொள்ளு வச்சா உடனே காலியாகிடும். நிலாவ பாக்காம துாங்க போகமாட்டேன். வெளியூருக்கு போனாலும், வீடியோகால் பேசுவோம். இவளுக்கு என்னோட எல்லா பீலிங்கும் புரியும். நான் சோகமா இருந்தா என் முகத்தோட, இவ முகத்தை வச்சி தேய்ச்சு, ஆறுதல் சொல்லும்,'' என்றார்.கொட்டகையின் பின்னிருந்து மற்றொரு குட்டிக்குதிரை, குகனை பார்த்து சீறிப்பாய்ந்தது. 'வேலா...! பஸ்ஸ்ஸ்....'னு, குகன் அதட்டியதும், அப்படியே நகராம நின்னுடுச்சு.இது வேறயாங்கற, மைண்டு வாய்ஸ் புரிஞ்சிடுச்சு போல. இது நிலாவோட பையன்னு அறிமுகப்படுத்தினார் குகன். லஞ்ச் டைம் வந்துடுச்சில்ல... அதான் அம்மாவ தேடுறான்னு சொல்லிட்டு இருக்கும் போதே, மகனை காணாத பரிதவிப்பில், கனைத்தது நிலா.தாயிடம் மகனை கொண்டு போய் விட்ட குகன், '' இப்போ இவங்க தான் என்னோட உலகம்'' என்றார்.அதை ஆமோதிப்பது போலவே, மீண்டும் குதிரை கனைத்தது! செலிபிரிட்டிஸ் தேடுற பெட் குரூமர்!செலிபிரிட்டிஸ் பெட்ஸ் மட்டும் எப்படி இவ்ளோ ஷைன்னிங்கா இருக்குங்கற கேள்வியை கூகுளில் தட்டினால், சோசியல் மீடியா பேஜ்களில், டாப் லிஸ்டில் இருக்கிறார், சென்னையை சேர்ந்த குரூமர் அருண்கிரி.இவரது புரொபைல் வாசித்ததும், ஆர்வம் அதிகமாகிடுச்சு. 23 வயசுல, இத்தனை செலிபிரிட்டி கம்ஸ்டமர்ஸ் எப்படின்னு கேட்டதும், சிரிச்சிட்டே பேச தொடங்கினார்.''என்னோட 12 வயசுலயே, இந்த பீல்டுக்கு வந்துட்டேன். ஒரு கிளினிக்ல குரூமர் கிட்ட அசிஸ்ட்டன்ட்டா இருந்து, தொழில் கத்துக்கிட்டேன். அந்த கிளினிக் மூலமா தான், கமல் சார் பழக்கம். இன்டர்வியூ வச்சி தான், என்னை செலக்ட் பண்ணாங்க.ஓ...!, இதுக்கெல்லாம் இன்டர்வியூவ்வா?ஆமாங்க. ஒரு சின்ன பையன நம்பி, செல்லப்பிராணிகளை கொடுப்பாங்களா...? ஒரு டெமோ குரூமிங் பண்ணேன். என்னோட ஒர்க் பிடிச்சதால, ஓகே சொல்லிட்டாங்க. கமல் சாரோட, 5 கோல்டன் ரெட்ரீவர்க்கும், நான் தான் குரூமர். என்னோட கேரியர் அங்கிருந்து தான் தொடங்குச்சு. அந்த பணத்துல தான், ஸ்கூல், காலேஜ் முடிச்சேன்.சோசியல் மீடியா, என்னோட பிளாட்பார்ம். செலிபிரிட்டி வீட்டு செல்லப்பிராணிகளுக்கு குரூமிங் முடிச்சிட்டு, போட்டோஸ் எடுத்து, இன்ஸ்ட்டா, பேஸ்புக்ல போஸ்ட் பண்ணுவேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. இப்போ, நடிகர் தனுஷ், ஜீவா, விக்ரம்பிரபு, ரம்யாகிருஷ்ணன் மேடம், டைரக்டர் பாரதிராஜான்னு, 10க்கும் மேல செலிபிரிட்டி கிளைன்ட்ஸ் இருக்காங்க.பெட்ஸ நீங்க எப்படி ஹேண்டில் பண்ணுவீங்க?புதுசா வர்ற பெட்ஸ், முதல்ல என்னை நம்பணும். குரூமிங் பண்றேன்னு, சீப்பு, சிசர்ர எடுத்துக்கிட்டு, உடனே களத்துல குதிச்சா, அது தாவி ஓடிடும். அதனால பெட்ஸோட சோசியலா அட்டாச் ஆகிட்டு, பேசிக் குரூமிங் முடிச்சிட்டு தான், அடுத்தடுத்த ஸ்டெப் பண்ணுவேன். ஓனர்கிட்ட அடம்பிடிக்கிற பெட்ஸ் கூட என்கிட்ட சமத்துக்குட்டியா இருக்கும்.குரூமிங் டிப்ஸ் சொல்லுங்களேன்!ஒவ்வொரு ப்ரீடுக்கும், குரூமிங் மெத்தட் மாறும். நிறைய பேர், ஹேர்ரி ப்ரீடு தான் விரும்புறாங்க. ஆனா, அதோட முடி சரியா பராமரிக்கலைன்னா, ஸ்கின் பிராப்ளம் வரும். கண்டுக்காம விட்டுட்டா, ஸ்மெல் வரும்.ஸ்கின்னுக்கு வலிக்காத மாதிரியான பிரஷ் வச்சி, டெய்லி சீவி விடணும். கண்களை, 'வைப்ஸ்' வச்சி துடைக்கணும். வாரத்துக்கு ஒருமுறையாவது, சாப்ட் சோப்பு, ஷாம்பு அப்ளை பண்ணி குளிக்க வைக்கணும். காது, மூக்குல தண்ணீர் போகக்கூடாது.கால்கள்ல இருக்க நகத்தை அடிக்கடி வெட்டி விடணும். இல்லாட்டி, ஆசையா அது தாவும் போது, ஓனரோட ஸ்கின் டேமேஜ் ஆகிடும். இது வெட்டிவிடத் தெரியலைன்னா, ரிஸ்க் எடுக்கக்கூடாது. நகத்தை வெட்டுறேன்னு, நிறைய பேர் அதோட விரலையே வெட்டிட்டு, அப்புறம் உட்காந்து அழுவாங்க.இவ்வளவு விஷயங்கள் இருக்கா?ஆமாங்க. ஒரு குழந்தைய பராமரிப்பது மாதிரி தான் செல்லப்பிராணிகளை வளர்க்குறது. இதெல்லாம் செய்ய முடியாதுன்னு நினைப்பவர்கள், பெட் லவ்வர்ரா இருக்கவே முடியாது. நம்ம ஸ்ட்ரஸ் பஸ்ட்டரான பெட்ஸ் மேல, அக்கறை, அன்பு, அரவணைப்பு காட்டலைன்னா எப்படி...!. செல்லப்பிராணிகளை வீட்டுல வைத்திருப்பவர்கள், லைப்போட ஒவ்வொரு நொடியையும், சந்தோஷமா பீல் பண்ணுவாங்க. அந்த பீலிங்கே வேற லெவல்!!!.புடிச்ச விஷயத்தை ரசிச்சு செய்றது இதுதான் போல!எலக்ட்ரால் பவுடர் கலந்த தண்ணீர்வெயில் காலங்களில் அதீத வெப்பத்தால் நாய்கள் பாதிக்கப்பட்டாலும் தோல் அழற்சி ஏற்படலாம். உண்ணி, பேன், மைட் இருக்கும்பட்சத்தில் அடிக்கடி சொறிவதால் தோலில் தடிப்புகள் வரும். பப்ளிக் பார்க் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு வாக்கிங் அழைத்து செல்லும் போது, பார்த்தீனியம் செடிகளில் உரசினாலோ அல்லது விஷப்பூச்சிகள் கடித்தாலோ, தோலில் சிவப்பாக தடித்து காணப்படும். அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.வெயிலின் தாக்கம் வீட்டிற்குள் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குடிக்க நல்ல தண்ணீர் அடிக்கடி கொடுப்பது அவசியம். நீர்ச்சத்து குறைந்தால் நாய்கள் சோர்வாக, சோம்பலாக இருப்பதோடு வாயில் நுரை வெளியேறலாம். கண்கள் வெளிர் இளஞ்சிவப்பாக மாறலாம்.இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், முதலுதவியாக வீட்டிலே எலக்ட்ரால் பவுடர் கலந்த தண்ணீர், நாட்டு வெல்லம் கலந்த தண்ணீர் கொடுத்த பின், மருத்துவரிடம் அழைத்து வர வேண்டும். மேலும் இக்காலத்தில் நாய்களுக்கு அதீத வெப்பத்தை சமன்படுத்த முடியாமல் சூட்டுக்கொப்புளம் வரலாம்.இதற்கு சுய மருத்துவம் செய்யக்கூடாது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மட்டுமே கொடுக்க வேண்டும். உணவில் விட்டமின் ஏ, டி3, இ மற்றும் சி ஆகியவை இருப்பதை உறுதி செய்தால், வெப்பத்தால் வரும் நோய்களில் இருந்து, செல்லப்பிராணிகளை தற்காத்துக்கொள்ள முடியும்.- எ. செல்வபிரபாகரன், கால்நடை மருத்துவர், கோவை. 'ஒன் அண்ட் டூ' சமாளிப்பது இனி, ரொம்பவே ஈஸி'குட்டீஸ் அடம்பிடிச்சாங்கன்னு பப்பி வாங்கிட்டு வந்தாச்சு. ஆனா எப்படி அதுக்கு, 'ஒன் அண்டு டூ' பழக்குறதுன்னே தெரியலை. வீட்டையே நாறடிச்சுடுதுங்கறது' தான் அம்மணிகளின் கம்ப்ளைன்ட்டாக உள்ளது. இனி அந்த டென்ஷனே வேண்டாம் என்கிறார், கோவை, 'லவ்வி பெட் ஷாப்' ஓனர் ராஜ்குமார்.பெட்ஸ் விளையாட மார்கெட்டுக்கு வந்துள்ள புதுவரவு பற்றி அவர்...ஸ்கூப்பர்: இதோட கைப்பிடிய பிரஸ் பண்ணா அடியில ஓபன் ஆகும். இது இருந்தா, டாய்லெட் அள்ளுறதுக்கு கஷ்டப்பட வேண்டாம்.மவுத் ப்ரஷ்னர்: பப்பிகளுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறையாவது பிரஷ் பண்ணிவிடனும். இல்லாட்டி துர்நாற்றம் வீசும். பல் துலக்கிவிட தெரியாதவங்களுக்காகவே மவுத் ப்ரஷ்னர் கிடைக்குது. இது ஸ்பிரே, 'ட்ரீட்' மாதிரி, கடைகள்ல வச்சிருக்கோம்.டாய்லெட் டிரைனிங் ஸ்பிரே: பப்பிகளுக்கு மூணு மாசம் வரைக்கும், டாய்லெட் டிரைனிங் பண்ணிட்டா கண்ட இடத்துல, 'ஒன் அண்டு டூ ' போகாது. இதுக்கு, பிரத்யேக மேட் டிரைனிங் ஸ்பிரே இருக்கு. குறிப்பிட்ட இடத்துல இந்த ஸ்பிரே அடிச்சிவிட்டா, அங்க மட்டும் தான் டாய்லெட் போகும்.வாட்டர் பாட்டில்: வெயில் காலத்திற்கு ஏற்ற வகையில் தண்ணீர் சொட்டு சொட்டா வடியிற மாதிரியும், மூடியிலயே பவுல் மாதிரி வளைந்து, தண்ணீர் இருக்கற மாடல்லயும் வாட்டர் பாட்டில் கிடைக்குது. உங்க பெட்டோட வெளியிடங்களுக்கு போகும் போது மறக்காம எடுத்துட்டு போலாம், என்றார்.
4 hour(s) ago | 6
7 hour(s) ago | 16