உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தால் தகித்த சென்னை

106 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தால் தகித்த சென்னை

சென்னை : சென்னையில் மீண்டும் வெப்பநிலை உயரத் துவங்கியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு பின், நேற்று, 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.தமிழகத்தில், கடந்த மார்ச் முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதேநேரம், கடந்த, 4ம் தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் துவங்கியது. இன்றுடன் இந்த கத்திரி வெயில் முடிகிறது. கத்திரி வெயில் துவங்கியதில் இருந்து, தமிழகம் முழுதும் பெரும்பாலான இடங்களில், கோடை மழை பெய்து வந்தது. சென்னையிலும், லேசான மழை பெய்து வந்தது. அதனால், வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.இந்நிலையில், வங்கக் கடலில் உருவான ரேமல் புயலால், தமிழக பகுதிகளில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, மீண்டும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில், 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெப்பம் பதிவானது. சென்னையில், 40.6 டிகிரி செல்ஷியஸ், அதாவது மாநிலத்திலேயே அதிகபட்சமாக, 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.வேலுார், 40; தஞ்சாவூர், 39; திருப்பத்துார், திருச்சி, திருத்தணி, கடலுார், ஈரோடு, மதுரை விமான நிலையம் மற்றும் புதுச்சேரியில், 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெப்பநிலை நிலவியது. வெப்ப அதிகரிப்பு குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களுக்கு, வெயில் காலம் இன்னும் உள்ளது. இடைப்பட்ட காலத்தில், கோடை மழை பரவலாக பெய்ததால், வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது. அதன்பின், ரேமல் புயல் வந்ததால், காற்றில் உள்ள ஈரப்பதம் மழை மேகக்கூட்டங்களை ஈர்த்து சென்று விட்டது.புயல் கரையை கடந்த நிலையில், இந்திய பெருங்கடலின் சூழல் மாறும் போது, வெப்பநிலை ஓரளவு குறையலாம். ஆனாலும், தமிழகத்தின் வடக்கு கடலோரம் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், ஜூன் வரையிலும் வெப்பம் அதிகரித்து காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ