உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை என் மனதை வென்றது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை என் மனதை வென்றது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னையில் இன்று நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அது குறித்து எக்ஸ் தளத்தில் சென்னை என் மனதை வென்றது என குறிப்பிட்டுள்ளார்.வெள்ளம் போன்ற பேரிடர்களில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய முன்னுரிமை. பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.உலக அரங்கில் தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் பிரபலப்படுத்துவோம். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.எழும்பூர் ரயில் நிலையம் உட்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.சென்னை என் மனதை வென்றது: இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோடு ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். சென்னையின் உற்சாகம், தமிழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதையும் காட்டுகிறது. இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளார் பிரதமர் மோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஏப் 10, 2024 11:28

அண்ணாமலை முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!


J.V. Iyer
ஏப் 10, 2024 06:29

தமிழக மக்களின் மனங்களை வெல்லும்வரையில் அவரும் தூங்கமாட்டார் இதுதான் ஒரு மன்னனின் அடையாளம் இவர் ஒரு சக்கரவர்த்தி அல்லவா ? நல்ல மனங்களை கவர்ந்த பிரதமர்


Kasimani Baskaran
ஏப் 10, 2024 05:41

முன்னரெல்லாம் கலர் கலராக பலூன் விட்டு கோ பேக் சொல்வார்கள் இந்த முறை அதற்குக்கூட திரானியில்லை தீம்காவின் நிதி ஆதாரங்களை ஒவ்வொன்றாக அடித்து உடைப்பதாக சொல்லப்படுகிறது ஆகவே திராவிடம் அதிக நாள் நீடிக்காது என்றுதான் எண்ணுகிறேன்


தாமரை மலர்கிறது
ஏப் 10, 2024 01:25

வடக்கே முன்னூறு தெற்கே நூறு என்று ஐநூறு தொகுதிகளை பிஜேபி வெல்லும்


முருகன்
ஏப் 09, 2024 23:39

மழை வெள்ளம் வந்த போது சென்னை மறந்து விட்டது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ