உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசியாவிலேயே பெரிய தகவல் தரவு மையம்; திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஆசியாவிலேயே பெரிய தகவல் தரவு மையம்; திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: சென்னையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தரவு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால், 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.CtrlS குழுமம் ரூ.4,000 கோடி முதலீட்டில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அம்பத்தூரில் அமைத்துள்ள சென்னை தகவல் தரவு மையத்தை முதல்வர் ஸ்டலின் இன்று திறந்து வைத்தார்.

குத்துச்சண்டை

கோபாலபுரத்தில் ரூ.8 கோடியில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் குத்துச்சண்டை போட்டியை நேரில் கண்டு களித்தார். 2,500 சதுர அடியில் 2 பாக்சிங் ரிங் உடன், ஒரே சமயத்தில் 750 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தொண்டர்களுக்கு கடிதம்

முன்னதாக, தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதி கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஹிந்தி படிக்காதே என்று யாரையும் தடுக்கவில்லை. ஹிந்தியை எங்கள் மீது திணிக்காதே! ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. ஹிந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஹிந்தி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் தி.மு.க.,வினர் இரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
பிப் 25, 2025 20:51

ஆசியாவிலேயே பெரிய தகவல் தரவு மையம் திறந்து வைத்தார் இப்படி சொல்லி சொல்லியே நம்மை நாம் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.வெளி மாநிலங்களுக்கு அல்லது வெளி நாடுகளுக்கு இவர் சென்று பார்த்தால் அங்கே என்ன முன்னின்றேம் அடைந்துள்ளது என்பது நன்றாகவே விளங்கும் இவருக்கு சரியானபடி அறிவுரை புகட்ட இங்கே ஆட்கள் இல்லை அதான் காரணம்


sankaranarayanan
பிப் 25, 2025 20:47

ஹிந்தி படிக்காதே என்று யாரையும் தடுக்கவில்லை. ஹிந்தியை எங்கள் மீது திணிக்காதே இந்த வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் என்ன என்று அவருக்கு தெரியாது புரியாது யார் எதை எப்படி திணிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா சும்மா திணிக்கிறார்கள்...திணிக்கிறார்கள் என்று கூவிக்கொண்டே ஒரு கூட்டத்தைக்கூட்டி மக்களை மடையவர்களாக்க வேண்டாம்.மக்களுக்கு எது நல்லது எது கெடுதல் என்று நன்றாகவே தெரியும்.அரசியல் சாயம் எல்லா வற்றிற்கும் பூசி மாணவ மாணவிகளின் வாழ்க்கையை பாழாக்க வேண்டாம்


Ramesh Sargam
பிப் 25, 2025 14:25

Sridhar Pinnapureddy இவர்தான் CtrlS குழுமத்தின் முதலாளி. அதாவது Founder and CEO. ரெட்டி என்றால் தெலுகு பேசும் அந்த ஆந்திர அல்லது தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவராகத்தான் இருக்கும். ஓங்கோல் குடும்பத்துக்கும், இந்த ரெட்டிகாருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?


முக்கிய வீடியோ