உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை:'பொதுமக்கள் தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:* வெப்பநிலை அதிகமாகும் காலங்களில், குழந்தைகள், பள்ளி மாணவ - மாணவியர், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல்நலக் குறைபாடு உடையவர்கள், அதிகம் பாதிக்கப்படலாம். இவர்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.* அரசு நிர்வாகம் கவனத்துடன், பாதுகாப்பு உணர்வுடன் செயல்பட, அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்* தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூக நல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், தொற்றுநோய் மருத்துவமனைகள் ஆகியவை, வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்த சிகிச்சை வழங்க, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன* திறந்தவெளிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன் கருதி, பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள், முதலுதவி வசதி ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது* வனத்துறையினர் காட்டுத்தீ பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க, தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வனவிலங்குகளுக்கு, போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. கூடுதலாக ஓ.ஆர்.எஸ்., உப்புக்கரைசல் வினியோகிக்கப்பட உள்ளது. அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்