உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய விடியலுக்கான துவக்கம் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

புதிய விடியலுக்கான துவக்கம் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை:'இந்தியாவின் புதிய விடியலுக்கான துவக்கமாக 4ம் தேதி அமையும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது சமூக வலைதளப் பதிவு:பா.ஜ.,வின் 10 ஆண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி இந்தியாவை காக்க உருவாக்கப்பட்ட 'இண்டியா' கூட்டணி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.,வுக்கு எதிராக ஜனநாயக சக்திகளின் மாபெரும் அணித்திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.தங்களது இடைவிடாத பரப்புரை வழியாக இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பா.ஜ., உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இண்டியா கூட்டணியின் வெற்றி செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.ஓட்டு எண்ணிக்கையின்போது அதிகமான விழிப்புணர்வுடன் கூட்டணி செயல் வீரர்கள் இருக்க வேண்டும். ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். பாசிச பா.ஜ., வீழட்டும்; இண்டியா வெல்லட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Jai
ஜூன் 02, 2024 17:42

மக்களை ஏமாற்ற கூட்டணி பெயரில் மட்டும் இந்தியா. எப்போதும் இந்தியாவிற்கு எதிராக எப்போதும் பிரிவினைவாதம் பேசும் கட்சி திமுக. பாஜகாவை எதிர்ப்பதாக கூறி வெளிநாடுகளில் சென்று இந்தியாவுக்கு எதிராக பேசுவதை ராகுலின் வாடிக்கை. இந்தியா முழுவதும் வாக்காளர் விழித்துவிட்டணர். தமிழ்நாட்டு மக்களால் மட்டும் இன்னும் திமுக ஐடியாலஜியைவிட்டு வெளியில் வரமுடியாது. அனைத்து ஊடகங்களிலும், அனைத்து படங்களிலும் ஐடியாலஜியை திணிப்பது, டிவி சிரியலும் ஐடியாலஜி என்ன மொத்த சிந்திக்கும் வழிகளையும் தடுத்து பிரிட்டிஷ்கார்கள் நடைமுறை படுத்திய அடிமைத்தனம் மாறாமல் பார்த்து கொள்வது என திமுக வாழ்ந்து வருகின்றனர். இது எவ்வளவு காலம் நீடிக்கும்? தமிழ்நாட்டு எம்பிக்கள் ஏற்கனவே 10 வருடம் சும்மா இருப்பதுதான் வேலை. அது இன்னும் 5 ஆண்டுகள் நீடிக்கும்


Rajamani
ஜூன் 02, 2024 09:25

உண்மைதான். தமிழகம் விழித்துக்கொண்டுவிட்டது.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ