உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறி குழந்தை பலி

தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறி குழந்தை பலி

மூணாறு: திருவண்ணாமலையைச் சேர்ந்த முகமது - ரூபிகா தம்பதி மூன்றரை மாத பெண் குழந்தை மற்றும் உறவினர்களுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.நேற்று காலை குழந்தைக்கு ரூபிகா தாய்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மூணாறு டாடா மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அச்சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்