| ADDED : ஏப் 22, 2024 12:09 AM
அவிநாசி : திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் உள்ளது.இந்தாண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று தேரோட்டம் நடந்தது. தேரில் சோமாஸ் கந்தர் எழுந்தருளினார்.காலை 9:50 மணிக்கு பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். மதியம் 12:06 மணிக்கு தேர் மேற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக நிலை நிறுத்தப்படும்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா, கடந்த 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து கோமதி அம்பாள் தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலை சேர்ந்தது.