உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.10.76 லட்சம் கோடி கொடுத்ததாக சொல்வது அப்பட்டமான பொய் கணக்கு: ஸ்டாலின் ஆவேசம்

ரூ.10.76 லட்சம் கோடி கொடுத்ததாக சொல்வது அப்பட்டமான பொய் கணக்கு: ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: 'தமிழகத்தின் வளர்ச்சிக்காக, 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்தோம் என பா.ஜ., அரசு கூறுவது அப்பட்டமான பொய் கணக்கு' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தின் வளர்ச்சிக்காக, 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்ததாக மத்திய பா.ஜ., அரசு கூறுவது அப்பட்டமான பொய் கணக்கு.கிள்ளிக் கொடுத்ததோஇது, மத்திய நிதிக்குழு பரிந்துரைப்படி, மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதிப்பகிர்வு; திட்டங்களுக்கான நிதியையும் உள்ளடக்கியது.இதன் கீழ் உ.பி.,க்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பா.ஜ., அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழகத்திற்கு கிள்ளிக் கொடுத்ததோ, 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. இன்னும் ஒற்றை செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்சுக்கு 1,960 கோடி ரூபாய். 1 ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில், இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி ரூபாய்; சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் என, ஒட்டு மொத்த தமிழ் மக்கள் காதிலும் பூ சுற்ற நினைக்கிறது பா.ஜ., அரசு.இந்த திட்டங்களின் கீழ், 10 ஆண்டுகளில் தமிழகத்தில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை, எந்த பா.ஜ., அமைச்சர்களாவது விளக்க முன் வருவரா?இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாய பொய், அடுத்த பொய். தம் உழைப்பாலும், தொழில் திறத்தாலும், மாநில தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழகத்தின் சிறுதொழில் முனைவோர், வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 கோடி ரூபாய் கடன்களையும், தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது மத்திய அரசு, எத்தனை பொய்களை தான் நாடு தாங்கும்; எங்கள் காதுகள் பாவமில்லையா?இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.'அறிவாயுதம்'முதல்வர் ஸ்டாலினின் மற்றொரு அறிக்கை: இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் ஏற்றி வைத்த அரசியல் சட்டம் என்ற ஒளியை, சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்களின் கடமை. பா.ஜ., என்ற பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது.நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல, கோரப் பசியுடன் திட்டங்களை தீட்டி வருகிறது.சமத்துவ சமுதாயத்தை உறுதி செய்ய புத்துலக புத்தர், அம்பேத்கரின் அறிவாயுதத்தை துணை கொள்வோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின், ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்; சென்னை அறிவாலயத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ