உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூடப்பட்ட தொழிற்சாலைகள்

மூடப்பட்ட தொழிற்சாலைகள்

ஸ்ரீவில்லிபுத்துார் : ''தமிழகத்தில் வெளிநாடு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்டுவது நல்லது தான். அதனை வரவேற்கிறோம். அதே நேரம் தமிழகத்தில் மூடி கிடக்கும் அரசு தொழிற்சாலைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதிலும் முதல்வர் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,'' என, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த மக்கள் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். முதல்வர் அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு நல்ல பலனை கொடுக்கிறது. நிரந்தரமான வேலை வாய்ப்பை தரும் திட்டங்களை செயல்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்.தமிழகத்தில் மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் வலுவாக குரல் எழுப்பி வருகிறது. தமிழகத்தில் வேறு எந்த கட்சி குரல் எழுப்பி உள்ளது.எங்களைப்பொறுத்தவரை மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் உரிய வகையில் அழுத்தம் கொடுக்கிறோம். போராடுகிறோம். அதே நேரம் இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும் பிரதமர் மோடியை எதிர்ப்பதில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். தமிழகத்திற்கு பிரதமர் நிதி தர மறுக்கிறார். மெட்ரோ திட்டத்திற்கு ரூ.63 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கினால் மற்றைய மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்படி நிதி ஒதுக்குவது. தமிழக அரசை செயலற்று அரசாக மோடி அரசு மாற்றுவதை எதிர்க்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை