உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் கோப்பை முன்பதிவு துவக்கம்

முதல்வர் கோப்பை முன்பதிவு துவக்கம்

சென்னை:முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான இணையதள முன்பதிவை, அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என்ற பிரிவுகளில் நடக்க உள்ள, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனையருக்கான இணையதள முன்பதிவை, அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.இதில், 53 வகைகளில், 27 விளையாட்டுகள் இடம்பெற உள்ளன. அவை, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளாக, அடுத்த மாதம் துவங்கி அக்டோபர் வரை நடக்க உள்ளன. இவற்றில் பங்கேற்க விரும்புவோர், https://sdat.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து, உரிய ஆவணங்களுடன், வரும் 25ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும். மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளின் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை நேரிலோ, அல்லது 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தை, 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ