உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் மருந்தகங்களில் 762 மருந்துகள் விற்க முடிவு

முதல்வர் மருந்தகங்களில் 762 மருந்துகள் விற்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மக்களுக்கான திட்டங்களை, ஜெயலலிதா பிறந்த நாளில் கூட துவக்கி வைக்கலாம்; அதில் தவறில்லை. தமிழகம் முழுதும் இன்று, 1,000 முதல்வர் மருந்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்,'' என, தி.மு.க., மருத்துவ அணி செயலர் எழிலன் கூறினார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இவற்றில், 25 முதல், 50 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும்.கூட்டுறவு துறையும், தமிழக மருந்துகள் சேவைகள் கழகமும் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. தமிழக அரசின் சார்பில், 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அம்மா மருந்தகங்களை மூடும் வாய்ப்பு இல்லை. கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம் போன்றவற்றுடன் முதல்வர் மருந்தகம் என, ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும்.அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது. குறிப்பாக, 762 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. மக்களுக்கான திட்டங்களை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் கூட துவக்கி வைக்கலாம்; அதில் தவறில்லை.வ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

baala
பிப் 24, 2025 11:32

எல்லாம் சரி/ இந்த தனியார் மருத்துவமனை எழுதும் மருந்துகள் கிடைக்குமா இங்கு. அதை வாங்கி வழங்க முடியுமா மக்களுக்கு. அதை பற்றி சொல்லுங்கள்.


RK
பிப் 24, 2025 10:53

இந்த டிராவிடிய கட்சிகள் மக்களின் உயிருக்கு உலை வைப்பதே குறிக்கோள் !!!. திமுக வந்தால் முதல்வர் மருந்தகம் அதிமுக வந்தால் அம்மா கிளினிக் மாறி மாறி ஆட்சி முடியும்போது இழுத்து மூடுவார்கள். எல்லாம் மக்களின் நன்மைக்காக செய்யிறது இல்லை அவர்களின் கட்சியும் குடும்பமும் சம்பாதிக்கிறதுக்கு செய்கிறார்கள். தமிழ்நாடு வேலை வாய்ப்பில்லாத மாநிலமாக மாற்றிவிட்டார்கள்.


Bhaskaran
பிப் 24, 2025 10:10

மக்கள் மருந்தகம்சில மருந்துகள் பலனில்லாதவை டூப்ளிகேட் அல்லது வீரியமே இல்லாதவை


rasaa
பிப் 24, 2025 10:09

மருந்து பட்டியல், விலை விபரம் அறிவிக்க முடியுமா?


R.P.Anand
பிப் 24, 2025 09:35

அங்கு உள்ள மருந்தை ரெகமெண்ட் பண்ண சொல்லி டாக்டர்கள் மிரட்ட பட வாய்ப்பு அதிகம் .


Sivagiri
பிப் 24, 2025 08:28

ஆண்களுக்கு , டாஸ்மாக்-கும் நடத்துவாங்க. பக்கத்திலேயே பார் , ஸ்னாக்ஸ் கடை , அப்புறம் , அப்பா மருந்துக்கடையும் நடத்துவாங்க , பெண்களுக்கு , ரேஷன் அரிசி , ஓசி பஸ் , கையில ஆயிரம் ரூபா , அம்மா மருந்துகடை. . . . . பிள்ளைகளுக்கு , சத்துணவு , ஓசி பஸ் , புக்ஸ் , சைக்கிள் , யூனிபார்ம் ,. . . அடேங்கப்பா . . .


GMM
பிப் 24, 2025 08:02

கிளினிக் மருத்துவர் நடத்தும் பார்மசி உடன் இணைந்து இருக்கும் . இங்கு தான் மருந்து இருக்கும் . தனியார் மருத்துவ , பரிசோதனை கட்டணம் அதிகம். ஏற்கனவே குறைந்தவிலை மருந்தகம் உள்ளன . முதல்வர் மருந்தகம் வீண் செலவு. தேர்தல் ஸ்டண்ட் . குடி, போதை பொருள் விற்பனை நிறுத்தம் மூலம் நோய் குறையும். சுத்திகரிக்க பட்ட குடிநீர் அவசியம். உள்ளாட்சி அமைப்புகள் குறைந்த வருவாயில் சுகாதாரம் பேண முடியாது. இதனை மாநில நிர்வாகம் தன் பொறுப்பில் எடுக்க வேண்டும். பொது மக்கள் கூடும் பஸ் நிலையத்தில் அம்மா உணவகம், ஓட்டல் தமிழ் நாடு, ஆவின் குடிநீர் , அம்மா மருந்தகம் மட்டும் இருக்க வேண்டும். . பிற கடைகள் அகற்ற வேண்டும்.


baala
பிப் 24, 2025 11:46

குறைந்த விலை மருந்தகங்களில் அவர்கள் விருப்பப்படி தான் மருந்துகள் வாங்கி விற்பனை. மக்கள் கேக்கும் மருந்துகள் அதிகள் கிடைப்பதில்லை. ஒட்டு மொத்தமாக yellorume............


எவர்கிங்
பிப் 24, 2025 08:00

அப்பா மருந்தகமா? பில்லில் 10/15%கட்சிக்காரனுக்கு அழவேண்டியதாக இருக்கும்


sankaranarayanan
பிப் 24, 2025 07:13

அம்மா மருந்தகங்களை மூடும் வாய்ப்பு இல்லை. முதல்வர் மருந்தகமும் இருக்கும் என்றால் என்ன அர்த்தம் அம்மா மருந்தகங்களை மூடும் எண்ணத்துடன்தான் இவைகள் இப்போது தேர்தலுக்கு முன்பு ஆரம்பிக்கப்படுகின்றன கெட்ட எண்ணம் இது நீடிக்காது அம்மா மறுந்தகத்தையே இந்ன்னும் சீராக்கி புதுமையாக்கி எல்லா மருந்தகளும் தட்டுப்பாடின்றி மலிந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்வதை விட்டுவிட்டு புதிதாக ஒன்றை இவர் பெயரில் ஆரம்பிப்பது தேவையே இல்லாதது மக்களின் பணம் விரயம்தான் இதன்மூலமாக இவரது கட்சித்தொண்டர்கள் பிழைக்க வழி இது வேறொன்றுமே இல்லை .


baala
பிப் 24, 2025 11:35

எந்த மறுந்தகமாக இருந்தாலும் சில மருத்துவமனைக்கு / மருத்துவர்கள் எழுதும் மருந்துகள் அரசு பெயரில் இயங்கும் மருந்தகங்களில் கிடைக்காது இதுதான் அப்பட்டமான உண்மை.


Kasimani Baskaran
பிப் 24, 2025 06:40

மத்திய அரசு திட்டத்துக்கு லேபிள் ஒட்டியது போல இருக்கிறதே...


SRIRAM
பிப் 24, 2025 08:41

என்ன சந்தேகம்.... இவர்களுக்கு சுய புத்தி இல்ல.... ஸ்டிக்கர் ஓட்டுவது இது புதிதல்ல......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை