உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆணையம் அமைந்ததும் கூட்டுறவு தேர்தல் * அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி  

ஆணையம் அமைந்ததும் கூட்டுறவு தேர்தல் * அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி  

சிவகங்கை:‛‛தேர்தல் ஆணையம் அமைத்த பின், கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்,'' என சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கூட்டுறவு தேர்தலுக்கென அகில இந்திய, மாநில அளவில் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட உள்ளது. அந்த ஆணையம் அமைத்ததும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர், இயக்குனர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற ரூ. பல ஆயிரம் கோடிக்கான தொழில் முதலீட்டை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார். கால்நடைத்துறையில் உதவி இயக்குனர், ஆய்வாளர் உட்பட காலிபணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டனர். இதனால் பணி நிறுத்தப்பட்டது. வழக்கு முடிந்த பின் காலிபணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை