உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அமைச்சரவையில் காங்., இடம் பெறணும் : கார்த்தி சிதம்பரம்

தமிழக அமைச்சரவையில் காங்., இடம் பெறணும் : கார்த்தி சிதம்பரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக அமைச்சரவையில் காங்., இடம் பெற வேண்டும் என சிவகங்கை தொகுதி எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம் கூறினார்.புதுக்கோட்டையில் நடந்த காங்., செயல் வீரர்கள் கூட்டத்தில்அவர் கூறியதாவது: அரசியலில் ஆளும் கட்சிஒன்று இருக்கிறது. எதிர்கட்சி ஒன்று இருக்கிறது. இப்படி இரண்டு பக்கமும் இல்லாமல் இரண்டாங்கெட்ட கட்சியாக காங்., இருக்கிறது. வி.சி., கம்யூ.,கட்சிகளுக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? நாமும் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் நம்மை திரும்பி பார்ப்பார்கள். நாம் கூட்டணியை மதிக்கிறோம்.திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம், அதன் திட்டங்களை மதிக்கிறோம். அதே நேரத்தில் நாம் பொதுப்பிரச்னைகளில் பேச தயக்கம் காட்டுகிறோம்.இனி தயக்கம் காட்ட கூடாது. நம்கட்சியை சேர்ந்த நெல்லை மாவட்ட நிர்வாகி ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இது வரையில் ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை.இதனை பேசாமல் எப்படி இருக்க முடியும். குற்றவாளிகள் மீதான என்கவுன்டர் கண்டிக்க வேண்டும். கேசை முடிப்பதற்காக தான் என்கவுன்டர் செய்கிறார்கள் . இதனை பேசும்போது மின் கட்டணத்தை பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.2029-ல் பார்லி தேர்தலுக்கு முன்பாக 2026-ல்தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அப்போது தமிழக அமைச்சரவையிலும் காங்., இடம் பெற வேண்டும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

A
ஜூலை 21, 2024 14:45

Suya Mariyaathai pesum VIDIYAL kumbalukku NO Soodu NO Soranai


Parthiban Nadar
ஜூலை 21, 2024 13:55

உண்மையிலேயே மிகவும் தைரியமான கருத்துக்கள்


sundarsvpr
ஜூலை 21, 2024 13:39

தி மு க தயவால் பெற்ற எம் பி பதவியை தூக்கி எறிந்த பிறகு இவ்வாறு பேசவேண்டும்.


Raj
ஜூலை 21, 2024 12:25

Who are you? What is your position in Congress


Barakat Ali
ஜூலை 21, 2024 11:09

இவன் மேல இருந்த கேஸெல்லாம் என்ன ஆச்சு ? பாஜகவுக்கு தேர்தல் நிதி கொடுத்து தப்பிச்சுட்டானா ??


Barakat Ali
ஜூலை 21, 2024 11:08

2006-11 திமுக அரசு சிறுபான்மை அரசு என்று பெயரெடுத்தது ...... அப்போது காங்கிரஸ் அதனை முட்டுக்கொடுத்து ஆதரித்து வந்தது ...... அப்போதும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறவேண்டும் என்ற குரல்கள் எழுந்தன .... ஆனால் அந்த ச...ன் மசியவில்லை .....


Swaminathan L
ஜூலை 21, 2024 10:58

பூசின மாதிரியும் இருக்கணும், பூசாதபடியே இருக்கணும். சட்டம், ஒழுங்கு பற்றி பேசணும். படுகொலைகள் பற்றி பேசணும். மின்கட்டண உயர்வு பற்றி பேசணும்.. அப்படின்னு பேசிட்டு விட்டுடணும். அமைச்சரவையில் இடம் குறித்து பேசி பேச்சை முடிச்சுக்கணும். தனியே நின்றாலும் வெற்றி.. இல்லையில்லை.. தனியே நிற்கிறதே வெற்றி தான்.


Kasimani Baskaran
ஜூலை 21, 2024 10:32

கற்பனை செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு.


krishnan
ஜூலை 21, 2024 10:27

தமிழ் நாட்டில் 1% வோட்டு கூட காங்கிரசுக்கு இல்லை. அறந்தாங்கியில் அரசருக்கு கொஞ்சம் , சிதம்பரத்திற்கு காரைக்குடியில் கொஞ்சம் வயதானவர்கள் வோட்டு போடலாம். 85+ திருநெல்வழி , குமரியில் 3% போடலாம். staalin மிக அதிகமாக 9 கொடுத்து இருக்கார் . அதுவும் காங்கிரஸ் மத்தியில் வெற்றி பெற்றால் 5 அமைச்சர் பதவிக்காக ..


ராமகிருஷ்ணன்
ஜூலை 21, 2024 09:16

கறிவேப்பிலை எல்லாம் முக்கிய உணவாக முடியாது. ஏன் இந்த கூவல்


krishnan
ஜூலை 21, 2024 10:28

மூப்பனாரோடு காங்கிரஸ் முடிஞ்சிருச்சு . தனியா நின்ன ஒரு சதவிகிதம் கூட வரத்து


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை