உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்கலனில் தீ விபத்து தடுப்பது சாத்தியமே

கொள்கலனில் தீ விபத்து தடுப்பது சாத்தியமே

எளிதில் தீப்பிடிக்கும் எரிபொருளை சேமித்து வைத்திருக்கும் போது அல்லது டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லும் போது தீ விபத்து சகஜமாகி வருகிறது. 2016ல் இருந்து 2022 வரை இது போன்ற தீ விபத்துகளில், ஒரு நாளைக்கு, 35 பேர் வரை பலியாகி உள்ளனர். உலகளவில், 59 சதவீதம் வணிகத் தடங்கல் தீ மற்றும் வெடிப்பினால் ஏற்படுகின்றன. இதுபோன்ற அபாயங்களால் எதிர்காலத்தில் நஷ்டத்தில் இருந்து ஒருவருடைய தொழிலைப் பாதுகாக்க முன் நடவடிக்கை முக்கியமானது.இவற்றை எப்படி தவிர்ப்பது 'ATOM' என்று ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி அதிக முயற்சிகள் எடுத்து, தீ விபத்துக்களை தவிர்க்க முடியாவிட்டாலும், எப்படி குறைப்பது என்ற முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.இவர்களின் தயாரிப்பு, பெட்ரோல் / டீசல், எரிவாயு எண்ணெய், நாப்தா, மண்ணெண்ணெய், ஜெட் எரிபொருள், ஏவியேஷன் பெட்ரோல், புரொப்பேன் வாயு, பியூட்டேன் வாயு, எல்பிஜி மற்றும் உயிரி எரிபொருள்கள் உட்பட அனைத்து ஹைட்ரோகார்பன் எரிபொருட்களிலும் செயல்படும்.

எப்படி வேலை செய்கிறது

இவர்களின் தயாரிப்புகள் 'ஸ்டோரேஜ்'களில் உள்ளமைக்கப்பட்ட செயலற்ற வெடிப்பு தடுப்பு தொகுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒற்றை எரிபொருள் நீராவி நிரலை சிறிய அளவுகளாக பிரித்திருப்பதால், இது விரைவாக தீ பரவுதலை பெரிதளவில் குறைக்கிறது.'NFPA கோட் - 69- ஸ்டாண்டர்ட் ஆன்' வெடிப்பு தடுப்பு அமைப்பின் கீழ் 'compliance-'க்கு SWRI ஆல் சோதிக்கப்படுகிறாது. இந்த கம்பெனி ATOM® NFPA 69, ASTM, IMDG, ICAO மற்றும் UNECE சர்வதேச தரங்களுக்கு இணங்குகிறது. ATOM® உற்பத்தி ஆலைகள் ISO சான்றிதழ் 9001, 14001, 18001 ஆகியன பெற்றுள்ளது.

வேறு என்ன பயன்கள்

இவர்களின் தயாரிப்புகள் எரிபொருளை பாதிக்குமா என்ற சந்தேகம் பலருக்கு வரும். இது எரிபொருளைப் பாதிக்காது அல்லது மாசுபடுத்தாது. Specification of the fuel மாறாமல் இருக்கும். இவர்களின் செயல்பட்டால் ஏற்படும் இடப்பெயர்ச்சி 3% க்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.இந்த, 'ஸ்டார்ட் அப்'-பின் கொள்கலன் அமைப்பானது எரிபொருள்களின் போக்குவரத்தின் போது 'ஸ்லோஷ்' காரணியை (அதாவது எரிபொருள்களின் ஆட்டத்தை) போக்குவரத்தின் போது கணிசமாக குறைக்கிறது. இவற்றை ரசாயன கழுவுதல் (Chemical Wash) அல்லது 'அல்ட்ராசோனிக்' வாயிலாக சுத்தம் செய்யப்படுகிறது.கொள்கலனின் கட்டமைப்பு integrity அப்படியே இருக்கும் வரை, தயாரிப்புகளின் பராமரிப்பு செலவு இல்லாமல் பராமரிக்கப்படுகின்றன. அவ்வப்போது செக்கிங் மற்றும் சுத்தம் செய்வது மூலம் நல்ல நிலையில் பராமரிக்க உதவுகிறது. ஏதேனும் சேதம் ஏற்பட்டால், உருக்கி மறுசுழற்சி செய்யலாம்.இணையதளம்: www.atomalloys.comசந்தேகங்களுக்குஇ-மெயில்: sethuraman.gmail.comஅலைபேசி: 98204 51259இணையதளம்: www.startupandbusinessnews.com- சேதுராமன் சாத்தப்பன் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ