மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
10 hour(s) ago | 16
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
10 hour(s) ago | 5
புதுடில்லி:தலைநகர் டில்லியில் 800 கிராம் ஹெராயினுடன் தம்பதி கைது செய்யப்பட்டனர்.புதுடில்லி திலக் நகரில் வசிப்பவர் ராஜேஷ் ராணா,44. அவரது மனைவி நீலம் ராணா,43. ஏற்கனவே போதைப் பொருள் விற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நீலம் ராணாவை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், திலக் நகர் வீட்டுக்கு நேற்று முன் தினம் நீலம் ராணா வந்திருக்கும் தகவல் போலீசுக்குக் கிடைத்தது. மேற்கு மண்டல துணைக் கமிஷனர் விசித்ர வீர் தலைமையில் போலீஸ் படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 800 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர். நீலம் மற்றும் அவரது கணவர் ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.பறிமுதல் செய்த ஹெராயின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் எனக்கூறிய போலீசார், ராஜேஷ் மீது 23 குற்ற வழக்குகளும் அவரது மனைவி நீலம் மீது 8 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
10 hour(s) ago | 16
10 hour(s) ago | 5