உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிட முடியாது: மத்திய அரசு விளக்கம்

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிட முடியாது: மத்திய அரசு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது பார்லிமென்டின் விருப்பம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது' என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சட்டங்களுக்கு பெயரை ஆங்கிலத்தில் மாற்ற, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று(ஜூலை 03) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், ‛‛புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை மீறவில்லை. யாருடைய அடிப்படை உரிமையையும் மீறவில்லை. 3 குற்றவியல் சட்டங்களுக்கும் ஆங்கில எழுத்துக்களில் தான் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது பார்லிமென்டின் விருப்பம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என விளக்கம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, மத்திய அரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு மீதான விசாரணை, ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 21:07

இன்னும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்றுதானே பெயர்? சட்டத்தின் பெயரை மாற்றி என்ன பயன்? அரசியல் சட்டத்தை மதிக்காமல் பிரிவினைவாதம் பேசும் மாநிலத்தில் எந்த பெயரும் ..


rama adhavan
ஜூலை 03, 2024 19:28

பெயரில் என்ன இருக்கிறது? சட்ட சாராம்சம் தானே முக்கியம். மதிய அரசை ஒன்றிய அரசு என பெயர் வைத்த தமிழக அரசு இச் சட்டங்களுக்கும் தமிழ் வளர்ச்சி துறையை கலந்து ஏதாவது புரியாத பெயர் வைக்கும்.


அப்புசாமி
ஜூலை 03, 2024 17:39

இந்த இந்திப்பேர் வெச்ச சட்டங்களை மக்கள் நிராகரிக்கணும்.


Shankar Narayanan
ஜூலை 03, 2024 17:38

முதலில் ஆங்கிலத்தை விலக்குங்கள் . இணப்பு மொழி என்று ஒரு மொழியை அறிமுகம் செய்யுங்கள் . அதற்க்கு பிறகு,உங்கள் கருத்தை நடைமுறை செய்வோம் . ஆங்கிலத்தில் விவரிக்க பட்டுள்ள சட்டங்களுக்கு மற்றொரு மொழியில் பெயர் இடுவது மிக தவறு , சிறுபிள்ளை தனமானது .


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
ஜூலை 03, 2024 16:02

குறிப்பாக தமிழகத்தில் உள்ள செஷன்ஸ் கோர்ட் நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பிண்ணனியை ஆராய வேண்டும் இவர்கள் அளிக்கும் தீர்ப்புகள் எல்லாமே ஆளும் திமுக திராவிட அரசுக்கு சாதகமாகவே உள்ளது.


karthik
ஜூலை 03, 2024 13:42

நம் நாட்டில் இருப்பது போன்ற கோமாளிகள் வேறு எந்த நாட்டிலும் இருக்க மாட்டார்கள்.. அடிமையாய் வைத்திருந்தவன் மொழியில் சட்டம் வேண்டுமாம். அடிமைத்தனம் இன்னும் மனத்தை விட்டு விலகவில்லை என்பதை தான் இது வெளிப்படுத்துகிறது...


Subramanian Marappan
ஜூலை 03, 2024 13:32

அரசு செலவில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு நினைவகங்கள் கண்ட இடத்தில் அரசியல்வாதிகளுக்கு சிலைகள் அரசு வரி பணத்தில் கட்டிய கட்டடங்களுக்கு தன்னிச்சையாக அப்பா பெயர் அரசு திட்டங்களுக்கு அன்பழகன் பெயர் கட்சியினர் பெயர் ஏதோ அவர்கள் பணத்தில் நிறைவேற்றப்பட்டது மாதிரி தோற்றம். எம் ஜீ யார் என்ற மனிதர் தன் சம்பாத்தியத்திலெல்லாம் ஊர்மக்கள் மற்றும நாட்டுக்கு வழங்கினார். அவர் திமுகவவுக்காக வேலை செய்திராவிட்டால் திமுக கல இல தங்க தங்க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தே இருக்க முடியாது. மேலும் அவர் தயவால் கருணாநிதி முதல்வர் ஆனார். அவரை டம்மி பண்ண எல்லா முயற்சியும் செய்து தோற்றார். இந்த வழக்கை போட்ட நபர் தமிழ் நாட்டில் அரசு செலவில் செய்யப்பட்ட திட்டங்களுக்கு பெயர் வைத்தபோது கும்பகர்ண நித்திரையில் இருந்தாரோ?


GMM
ஜூலை 03, 2024 13:20

தெளிவான பதில், விளக்கம். பாராளுமன்ற, அரசு நிர்வாக நடைமுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற போர்வையில் உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தன் எல்லைக்குள் விசாரிக்க அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். கவர்னர், பிற மாநிலம், மத்திய அரசு நிர்வாக முடிவை விசாரிக்க கூடாது.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 03, 2024 14:07

அறிவாளியே... முன்சீப் கோர்ட்டா இருந்தாலும், செசன்ஸ் கோர்ட்டா இருந்தாலும், உயர் நீதிமன்றமா இருந்தாலும்... அந்த நீதிபதிகள் எதையும் விசாரிக்கலாம்...? அவங்க சட்டப்படி விசாரிக்கலாம். இது தெரியாம... கிறுக்கன் மாதிரி விசாரிக்கக் கூடாது..ன்னு சொல்ல நீ என்ன ...


sethu
ஜூலை 03, 2024 15:25

திமுக தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் நீதிபதிகள் எங்கெல்லாம் பதவியில் இருப்பார்களோ அங்கெல்லாம் இந்தகேஸாக இருந்தாலும் அரசு செலவில் தூக்கி சென்று தீர்ப்பை வாங்கிவிடுவார்கள் தமிழனின் நீங்க துயரம் திமுக


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை