உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரெட் பிக்ஸ் நிர்வாகிக்கு மே 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் : திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் உத்தரவு

ரெட் பிக்ஸ் நிர்வாகிக்கு மே 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் : திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி:'ரெட் பிக்ஸ்' யு- டியூப் சேனல் நிர்வாகியான ஃபெலிக்ஸ் ஜெரால்டை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி, மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதுாறு பேசியதாக, யு-டியூபர் சவுக்கு சங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். சவுக்கு சங்கரின் செயலுக்கு துாண்டுதலாக இருந்ததாக, யு-டியூபர் சங்கரை பேட்டி எடுத்து, சேனலில் பதிவு செய்ததாக 'ரெட் பிக்ஸ்' யு-டியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு என்பவரை இரண்டாவது குற்றவாளியாக சேர்த்து, திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தொடர்ந்து,அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்ட ஆலேசானை நடத்திய திருச்சி போலீசாருக்கு, அவர், டில்லியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் உத்தரவின்படி, டில்லி சென்ற தனிப்படை போலீசார், கடந்த 10ம் தேதி இரவு, டில்லியில் உள்ள பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் மனு கொடுக்கச் சென்ற ஃபெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர்.டில்லியில் கைது செய்யப்பட்ட அவரை, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சிக்கு அழைத்து வர உள்ளதாக, தகவல் வெளியானது. ஆனால், கைது செய்து இரண்டு நாட்களாகியும்ஜெரால்டை எங்கு வைத்துள்ளனர் என்று தெரியாததால் அவரது மனைவி ஜென் ஆஸ்டின், என் கணவரை எங்கு வைத்து உள்ளனர் என்ற தகவலை போலீசார் உடனே தெரிவிக்க வேண்டும், என்றுநேற்று இரவு திருச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தார். இந்நிலையில், சென்னையில் இருந்து, ஃபெலிக்ஸ் ஜெரால்டை திருச்சிக்கு அழைத்து வந்த எஸ்.பி., யின் தனிப்படை போலீசார், திருச்சி சைபர் கிரைம் போலீசில் ஆஜர்ப்படுத்தினர். தொடர்ந்து திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வடிக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா, வரும் 27ம் தேதி வரை ஃபெலிக்ஸ் ஜெரால்டைநீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். போலீசார் பெலிக்ஸ் ஜெரால்டை, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை