மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
மதுரை : விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக நேர்மையான போலீஸ் அதிகாரிகளை கொண்ட தனிப்படையை நியமித்து விசாரிக்க எஸ்.பி.,நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஜாமின், முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது.வெள்ளூரில் உரிமம் இல்லாத பட்டாசு ஆலையில் ஜன.27ல் தீ விபத்து ஏற்பட்டது. பெரியார் நாட்டாமை என்பவர் மீது ஆமத்துார் போலீசார் வழக்கு பதிந்தனர். தாயில்பட்டியில் உரிமம் இன்றி ஒரு வீட்டில் பட்டாசு தயாரித்தபோது மார்ச் 11 ல் விபத்து ஏற்பட்டது. பாஸ்கரன் என்பவர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். அவர் முன்ஜாமின் மனு, கைதான பெரியார் நாட்டமை ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.ஏப்ரலில் நீதிபதி பி.புகழேந்தி உத்தரவு: உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளில் நடந்த 2 விபத்துகளில் ஒருவர் இறந்தார். ஒரு பெண் காயமடைந்தார். சட்டவிரோத பட்டாசு ஆலைகளை கட்டுப்படுத்த வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. வழக்கின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனுதாரர்களுக்கு இடைக்கால ஜாமின், முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.நேற்று நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் பட்டாசு ஆலைகளில் 82 விபத்துகள் நடந்துள்ளன. வி.ஏ.ஓ.,கிராம உதவியாளர், ஊராட்சி செயலர்களுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் செயல்பட வாய்ப்பில்லை. இவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தடுக்க முடியும். டி.ஆர்.ஓ.,திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை நேர்மையான போலீஸ் அதிகாரிகளை கொண்ட தனிப்படையை நியமித்து விசாரிக்க எஸ்.பி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் விபத்தின் தன்மை, பாதிப்பை கருத்தில் கொண்டு ஜாமின், முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு உத்தரவிட்டார்.
2 hour(s) ago
2 hour(s) ago