அஞ்சலக ஏ.டி.எம்.,களால் வாடிக்கையாளர்கள் அவதி
ஒரு மாதத்திற்கும் மேலாக பணம் நிரப்பப்படாததால் பெரும்பாலான அஞ்சலக ஏ.டி.எம்.,கள் செயல்படாமல் உள்ளன. அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம்., கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக அஞ்சலக ஏ.டி.எம்., செயல்படவில்லை. அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பணம் நிரப்பும் ஏஜன்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சில ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பவில்லை' என்றனர். சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கூறுகையில், 'ஒரு மாதத்திற்கு மேலாக ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியவில்லை. மாற்று வங்கி ஏ.டி.எம்.,மில் அதிகமுறை பணம் எடுத்தால் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது' என்றனர். - நமது நிருபர் -